Janhvi kapoor: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி.. அச்சச்சோ என்னாச்சு?

மும்பை: இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வளர்ந்து வரும் இளம் நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் ஜான்வி கபூர். இந்தியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் தேவரா படத்தில் ஜூனியர் என்டிஆருடனும் அடுத்ததாக ராம்சரணுடன் அடுத்த படத்திலும் கமிட் ஆகி நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

அழகும் கவர்ச்சியும் ஒருசேர அமைந்துள்ள ஜான்வி கபூரை தமிழிலும் விரைவில் நாயகியாக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜான்வி கபூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Janhvi Kapoor

நடிகை ஜான்வி கபூர்: இந்திய அளவில் பிரபலமான மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளாண ஜான்வி கபூர் தொடர்ந்து இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து தேவரா படத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதேபோல ராம்சரணுடன் அடுத்த படத்தில் இணைந்து நடித்து வருகிறார் ஜான்வி கபூர். தமிழிலும் விரைவில் இவரை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உடல்நலம் பாதிப்பு: ஆனால் தமிழ் நடிகர் சூர்யாவுடன் பாலிவுட்டில் உருவாக உள்ள கர்ணா படத்தில் ஜான்விகபூர் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள உலஜ் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜான்வி கபூர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இலையில் ஜான்வி கபூருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் அவர் ஃபுட் பாய்சனிங்கால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியவில்லை. இதனால் அவர் தன்னுடைய ப்ரொமோஷன்கள் மற்றும் ஷூட்டிங் ஆகியவற்றை கேன்சல் செய்துவிட்டு வீட்டிலேயே ஓய்வெடுத்தார்.

மருத்துவமனையில் அனுமதி: ஆனாலும் நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில், இன்றைய தினம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளைய தினம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் அவர் உலஜ் பட புரமோஷன்களில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நடிகையான ஜான்வி கபூர் ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக தொடர்ந்து இருந்து வருகிறார்.

25 மில்லியன் பாலோயர்கள்: சமூக வலைதளங்களில் தன்னுடைய அடுத்தடுத்த கவர்ச்சி புகைப்படங்களால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் ஜான்விகபூரை இன்ஸ்டாகிராமில் ஏறக்குறைய 25 மில்லியன் ஃபாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஜான்வி கபூர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை கேட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் விரைவில் உடல்நிலை தேற வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X