ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.. "அது" அவுங்களே இல்லை.. ஏமாந்து போகாதீங்க.. எச்சரிக்கையாக இருங்க!

சென்னை: ஜான்வி கபூர் பெயரில் பல போலி கணக்குகள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான குறியீடு(ப்ளூ டிக்) உடன் ஒரு கணக்கு செயல்பட்டு வந்தது. அந்த கணக்கு போலி கணக்கு என்று, ஜான்வி கபூருக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை என்றும், அவரின் செய்தித்தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழியில் நடித்து சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடன் ஜோடியாக நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடனும் இவர் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளர் போனிக்கபூரை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கினார். ஸ்ரீ தேவியின் மறைவுக்கு பிறகு, அவரது மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

janhvi kapoor Sridevi Twitter

ஜான்வி கபூர்: தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், நேரடியாக ஒடிடியில் வெளியான குன்ஜன் சேக்சேனா தி கார்கில் கேள் என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார். இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து, கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட் லக் ஜெர்ரி, பவாலா ஆகிய படங்களில் நடித்து பெயர் எடுத்தார்.

இவர் நடிகர் ஷிகர் பஹாரினை காதலிப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இது குறித்து இருவரும் வாய் திறக்கவில்லை என்றாலும், பல இடங்களில் இவர்கள் ஜோடியாக காணப்படுகின்றனர். தற்போது ஜான்வி கபூர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் தேவாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

போலி கணக்கு: இந்நிலையில், நடிகர் ஜான்வி கபூரின் பெயரைப் பயன்படுத்தி பல கணக்குகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான குறியீடு(ப்ளூ டிக்) உடனுடனும் கணக்கு செயல்பட்டு வந்தன. அவை உண்மையானவை என நினைத்து ரசிகர்கள் அவற்றை பாலோ செய்து வருகின்றனர் இந்த பிரச்சினை குறித்து, ஜான்வியின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "டிஜிட்டல் உலகில், யாருடைய பெயரிலும் கணக்கை உருவாக்குவது மிகவும் எளிதானது. ஜான்வி கபூருக்கு ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை. இந்த போலி கணக்குகள் மூலம் வழங்கப்பட்ட எந்த தகவலையும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X