twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருப்பு உடையில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

    |

    மும்பை : இளம் நடிகையான ஜான்வி கபூர் முதன்முறையாக பேயாக நடித்திருக்கும் ரூகி திரைப்படம் வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

    ரூகி படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் படு பிஸியாக இருக்கும் ஜான்வி கபூர் இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

    பட ப்ரமோஷனுக்காக கருப்பு நிற உடையில் கண்டமேனிக்கு தொடை அழகு உட்பட அனைத்தையும் காட்டிக்கொண்டு வெறியேற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

    மிரட்டலான பேயாக

    மிரட்டலான பேயாக

    பாலிவுட் திரைத்துறையில் வலம் வரும் பல வாரிசு நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர் விரைவில் தமிழிலும் அறிமுகமாக இருக்க இதுவரை படங்களில் க்யூட் கதாநாயகியாக வந்து அனைவரையும் ரசிக்க வைத்து சென்றவர் இப்பொழுது மிரட்டலான பேயாக நடித்துள்ளார். இயக்குனர் ஹார்டிக் மேத்தா இயக்கியிருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்டானதைத் தொடர்ந்து வரும் மார்ச் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    நடுங்கவைக்கும் ஹாரர்

    நடுங்கவைக்கும் ஹாரர்

    ராஜ்குமார் ராவ் , வருண்சர்மா ஆகியோர் உடன் காமெடியில் கலக்கி இருக்கும் ஜான்வி கபூர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடுங்கவைக்கும் ஹாரர் கதையில் நடித்திருக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கும் இந்த படத்தைக்காண அனைவரும் ஆவலுடன் இருக்க பாடல்கள் ஸ்னீக் பீக் காட்சிகள் என படக்குழு ஒரு புறம் பட்டையை கிளப்பி வர மறுபுறம் ஜான்வி கபூர் தடபுடலாக ப்ரமோஷன் பணிகளை சமூகவலைதளங்களில் பின்னி எடுத்து வருகிறார்.

    குட்லக் ஜெர்ரி

    குட்லக் ஜெர்ரி

    தென்னிந்திய திரைப்படங்கள் சமீபகாலமாக பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் ஜான்வி அடுத்தடுத்து இரண்டு தென்னிந்திய திரைப்படங்களின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அதிலொன்று நயன்தாராவின் கோலமாவு கோகிலா. இந்தப்படத்திற்கு இந்தியில் குட்லக் ஜெர்ரி என டைட்டில் வைக்கப்பட்டிருக்க பஞ்சாப்பில் முழுவீச்சுடன் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    ஒரு பக்கத்தொடை

    ஒரு பக்கத்தொடை

    ரூகி படத்தின் ப்ரமோஷனுக்காக ஜான்வி இப்பொழுது கருப்பு நிற உடையில் ஒரு பக்கத் தொடை முழுவதையும் பளீரென காட்டிக்கொண்டு வெறி ஏற்றும் பல்வேறு ரொமான்டிக்கான எக்ஸ்பிரஷன்களில் பார்க்கும் அனைவரையும் பற்ற வைக்கும் பிளாக் குயின் போல இருக்கும் இந்த ப்ரோமோஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரையும் ஈர்த்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    English summary
    Bollywood Actress Janhvi Kapoor hot look stunning pics
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X