Janhvi kapoor: தேவரா படத்தோட 2வது பாகத்துலதான் எனக்கு வேலையே.. கமல் போலவே பேசிய ஜான்வி கபூர்!
மும்பை: மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் டோலிவுடிலும் அடுத்தடுத்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில் ஜூனியர் என்டிஆருடன் அவர் நடித்துள்ள தேவரா படம் வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின்மூலம் தென்னிந்திய மொழிகளில் ஜான்வி கபூர் தன்னுடைய என்ட்ரியை கொடுக்கவுள்ளார். அடுத்ததாக ஜான்வி கபூரின் நடிப்பில் உருவாகியுள்ள உலஜ் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், இதன் பிரமோஷன்களில் தற்போது ஜான்வி கபூர் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, தேவரா படத்தில் நடித்தது குறித்து நடிகை ஜான்வி கபூர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

நடிகை ஜான்வி கபூர்: பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்துக் கொண்டு வருகிறார். பாலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுடிலும் அடுத்தடுத்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோருடன் இணைந்துள்ளார். ஜூனியர் என்டிஆருடன் தேவரா படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளார் ஜான்வி கபூர். இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தேவரா படம்: தேவரா படம் கொரட்டாலா சிவா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை மிரட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ள ஜான்வி கபூர் குறித்தும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு பாகங்களாக உருவாக உள்ள தேவரா படத்தின் இரண்டாவது பாகத்தில் தான் தனக்கு அதிகமான காட்சிகள் அமைந்துள்ளதாக நடிகை ஜான்வி கபூர் தற்போது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
கமல் போலவே பேசிய ஜான்வி: முன்னதாக கல்கி 2898 ஏடி படத்தின் ப்ரோமோஷன்களின் போது பேசிய நடிகர் கமல்ஹாசனும் இதே போலவே பேசியிருந்தார். கல்கி படத்தின் முதல் பாகத்தில் தனக்கு காட்சிகள் மிகவும் குறைவு தான் என்பதை ஒப்புக்கொண்ட நடிகர் கமல்ஹாசன், படத்தின் இரண்டாவது பாகத்தில் தான் தனக்கு வேலை அதிகம் என்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஜான்வியும் நடிகர் கமல்ஹாசனை போலவே பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜான்வி கபூர் உற்சாகம்: அடுத்ததாக ஜான்வி கபூர் நடிப்பில் ஆகஸ்ட் 2ம் தேதி உலஜ் படம் ரிலீசாகவுள்ளது. இதன் பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ள ஜான்வி கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். இந்நிலையில் மீண்டும் உலஜ் படத்தின் பிரமோஷன்களில் பங்கேற்றுள்ள ஜான்வி கபூர், தன்னுடைய தென்னிந்திய என்ட்ரி படமான தேவரா படம் குறித்து தற்போது பேசியுள்ளார். மேலும் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ஒரு பாடலில் மட்டுமே தான் நடித்துள்ளதாகவும் விரைவில் இரண்டாவது பாடலுக்கான சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் ஜானவி மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications