பீச்சில் மணல்வீடு கட்டி விளையாடிய ஜான்வி கபூர்.. என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு!
சென்னை: பாலிவுட்டில் மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான தேவரா படம் மூலம் டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருந்தார் ஜான்வி கபூர். தேவரா படம் பான் இந்தியா படமாக வெளியான நிலையில், ரிலீசுக்கு முன்னதாக சென்னை, ஐதராபாத் என அவர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. தமிழ்நாடு தன்னுடைய அம்மாவின் மாநிலம் என்பதால் தன்னுடைய மனதிற்கு நெருக்கமானது என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தேவரா படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட ஜான்வி கபூரின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அடுத்ததாக ராம்சரணுடன் இணைந்து தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இந்தப் படமும் பான் இந்தியா படமாகவே வெளியாகவுள்ள நிலையில், அவருக்கு சிறப்பாக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் ஜான்வி கபூர் கமிட்டாகி வருகிறார்.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்: பாலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நாயகியாக அடுத்தடுத்த படங்களில் இணைந்து வருகிறார் நடிகை ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளாக சிறப்பான பின்னணியில் படங்களில் அறிமுகமான ஜான்வி கபூர், அடுத்தடுத்து தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து, தற்போது தென்னிந்திய மொழி படங்களிலும் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார். சமீபத்தில் ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர் நடித்து தேவரா படம் வெளியானது. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஜான்வி கபூருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.,
ஸ்ரீதேவி மகள்: ஸ்ரீதேவி மகள் என்ற அடையாளத்துடன் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்துவரும் நடிகை ஜான்வி கபூர், அவரது பெயரை காப்பாற்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தன்னுடைய முதல் படமான தடக் படத்தின்மூலமே ரசிகர்களை கவர்ந்த ஜான்வி கபூர், அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார். சில படங்கள் அவருக்கு சொதப்பலாகவும் மாறியுள்ள நிலையில், ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். சமீபத்தில் விளையாட்டு தொடர்பான படத்திற்கான தீவிரமாக பிராக்டீஸ் செய்ததையும் பார்த்த ரசிகர்கள், ஸ்ரீதேவி மகளாக இருப்பதால் அவரது டெடிகேஷனை ஜான்வி கபூரிடமும் இருப்பதாக பாராட்டு தெரிவித்தனர்.
டோலிவுட்டில் அடுத்தடுத்த படங்கள்: தேவரா படத்தில் ராம்சரணுடன் ஜான்வி கபூர் ஜோடி சேர்ந்து நடித்திருந்த நிலையில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பான பாராட்டுக்களை பெற்றிருந்தது. படத்தின் இயக்குநர் கொரட்டாலா சிவாவும் ஜான்வி கபூர் தென்னிந்திய பெண் என்றும் அவரும் ஜூனியர் என்டிஆரும் மிகச்சிறந்த ஜோடி என்றும் பாராட்டியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டி சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக டோலிவுட்டில் ராம்சரணுடன் இணைந்துள்ளார் ஜான்வி கபூர்.
மணல்வீடு கட்டிய ஜான்வி கபூர்: பாலிவுட்டிலும் இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது ஜான்வி கபூரின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவர் பீச் மணலில் உட்கார்ந்து கொண்டு சிறு குழந்தை போல மணல் வீடு கட்டி விளையாடியதை இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. தன்னுடைய அம்மா அதிக அளவில் தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்பதால் தென்னிந்தியா தனக்கு எப்போதுமே மனதுக்கு நெருக்கமான ஒன்று என்று முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். குறிப்பாக தமிழ்நாட்டை அவர் குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்நிலையில் பீச்சை பார்த்தவுடன் அவர் தன்னுடைய குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்திக் கொண்டு மணல் வீடு கட்டியதை பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருந்தது.


Click it and Unblock the Notifications











