Janhvi Kapoor: ரசிகர்கள் காத்திருந்த தருணம்.. தமிழில் என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதேவி மகள்!

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இந்தியில் பிஸியான நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிகளில் இவரை அறிமுகம் செய்ய பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முயற்சித்த நிலையில் ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர் ஜோடி சேர்ந்து நடித்த தேவரா படம் கடந்த ஆண்டில் வெளியாகி அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது.

தேவரா படத்தை தொடர்ந்து அடுத்ததாக ராம்சரணுடன் இணைந்து நடித்து வரும் ஜான்வி கபூர் தமிழிலும் என்ட்ரிஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வெப் தொடர் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் சூட்டிங் நடந்துவரும் நிலையில் அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Janhvi Kapoor Devara movie tamil cinema

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்: மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறார். பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் தென்னிந்திய மொழிகளிலும் கவனம் செலுத்த தயாராகியுள்ளார். கடந்த ஆண்டில் ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர் நடித்திருந்த தேவரா படம் ரிலீசாகி மிகப்பெரிய வசூலை பெற்றது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்விகபூரின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. ரசிகர்களையும் வெகுவாக எண்டெர்டைன் செய்தது. பாடல் காட்சிகளில் ஜான்வி கபூரின் ஆட்டம் சிறப்பாக அமைந்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

தேவரா படத்தின் வெற்றி: இந்தப் படத்தின் சிறப்பான வெற்றியை தொடர்ந்து ஜான்வி கபூருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக ராம்சரணுடன் இணைந்து படத்தில் நடித்து வருகிறார். இவரை தமிழில் நடிக்க வைக்க நீண்ட காலமாக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவகார்த்திகேயனுடன் ஜான்விகபூர் இணைய உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில் தயாரிப்பாளரும் ஜான்வியின் அப்பாவுமான போனி கபூர் மறுத்திருந்தார். இந்நிலையில் தற்போது பா. ரஞ்சித் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகிவரும் வெப் தொடரில் ஜான்வி இணைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் என்ட்ரி: இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இந்த வெப் தொடரை தயாரிக்கவுள்ள நிலையில் இந்த வெப் தொடர் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இதன் சூட்டிங் துவங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டில் இந்த வெப் தொடர் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெப் தொடர் பான் இந்தியா தொடராக உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

ரசிகர்கள் உற்சாகம்: தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் இணைந்து நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த இவர் ஒரு கட்டத்தில் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அங்கும் முன்னணி நடிகையாக தன்னை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அவரது மகள் ஜான்வி கபூர் ஏன் தமிழில் என்ட்ரி கொடுக்கவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே காணப்பட்டது. தற்போது ரசிகர்களின் விருப்பம் பூர்த்தியாகியுள்ளது. தற்போது இந்தியில் பரம சுந்தரி படத்தில் ஜான்வி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X