“யாஷ் அழகான அற்புதம்“… மனம் திறந்து பாராட்டி கங்கன ரனாவத் !

மும்பை : நடிகை கங்கனா ரனாவத், நடிகர் யாஷை, பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனோடு ஒப்பிட்டு கருத்துத் தெரிவித்துள்ளார்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

Bollywood actress kangana ranavat praises yash and compares with Amitabh bachchan

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமுழுவதும் வெளியானது. தமிழகத்தில் 350க்கும் மேற்பட்ட அதிகமான திரையரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டுவருகிறது. கேஜிஎஃப் 2 திரைப்படம் 275 கோடி முதல் 280 கோடி வரை உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கே.ஜி.எஃப் மூன்றாம் பாகம் இருப்பது போல படத்தை முடித்துள்ளதால், கே.ஜி.எஃப் 3 குறித்த ஆர்வம் ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.

Bollywood actress kangana ranavat praises yash and compares with Amitabh bachchan

இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,யாஷை புகழ்ந்து ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், கடந்த சில தசாப்தங்களாகக் காணாமல் போயிருந்த கோபக்கார இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார் யாஷ். 70களில் இருந்து அமிதாப் பச்சன் விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்தை நடிகர் யாஷ் அழகான அற்புதத்தை நிரப்பிஉள்ளார்.

கங்கனா ரனாவத் பகிர்ந்துள்ள மற்றொரு பதிவில், யாஷ், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் ஆகியோரின் புகைப்படங்களைப் பதிவிட்டு, தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் தங்கள் கலாசாரத்தில் வேரூன்றி இருக்கிறார்கள். திறமை, கடின உழைப்பு தவிர அவர்கள் கேரக்டர்களின் நம்பகத் தன்மை பார்வையாளர்களை ஈர்க்கிறது என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X