எனக்கு வசதியா இருந்தா போதும்.. நான் எப்படி வேணும்னாலும் டிரஸ் போடுவேன்.. உடையில் கறார் காட்டிய நடிகை!
சென்னை: பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் குஷி முகர்ஜி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட விவகாரமான வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி பேசு பொருளாகி உள்ளது. ஆபாசமான உடையுடன் இருக்கும் அந்த வீடியோவை பார்த்த பலர், மோசமான கமெண்டுகளை பதிவிட்டு வருவதால், பெரும் மன உளைச்சல் அடைவதாக நடிகை குஷி முகர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த நடிகை குஷி முகர்ஜி, 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ந் தேதி பிறந்தார். 28 வயதே ஆன குஷி முகர்ஜி, இளம் வயதிலேயே மாடலிங் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த அடையாளத்தால், திரைப்பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன. தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சினிமாவில் முன்னேற முயற்சி செய்த குஷி, தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நிதின், ஸ்ரத்தா ஜோடியாக நடித்த 'ஹார்ட் அட்டாக்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை குஷி முகர்ஜி: அந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வந்த இவருக்கு, பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷி முகர்ஜி, தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமான உடைகளை அணிந்து மாடலிங் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். டிஜிட்டல் கிரியேட்டராக தனது பயணத்தைத் தொடங்கிய, குஷி முகர்ஜியை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற இவர் கார் இருந்து இறங்கியபோது, அவர் ஒரு மேலாடையை மட்டுமே அணிந்திருந்தார். ஒரு பேண்டோ, டவுசரோ என எதுவும் அணியால் இருந்தார். இதனால் அவரின் மற்ற பாகங்கள் ஆபாசமாக தெரிந்தன. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியாகி பலரும் இவரை கண்டபடி திட்டித்தீர்த்தார்கள்.
மன உளைச்சலில் நடிகை: இதற்கு பதில் அளித்த குஷி முகர்ஜி, சிலர் வேண்டுமென்றே என்னுடைய ஆடை விஷயத்தை பற்றி பேசி வருகிறார்கள். உடை விஷயத்தில் நான் ஊர்ஃபி ஜாவேதை மிஞ்சிவிட்டார் என்று விமர்சனங்கள் செய்கிறார்கள். இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். "நான் எந்த ஆடை அணிந்தாலும் அது மற்றவர்களைப் பாதிக்காது. நான் அணியும் ஆடை எனக்கு வசதியாக இருந்தால் போதும், எனக்கு பிடித்துஇருந்தால் போதும், மற்றவர்களுக்காக நான் உடை அணியவில்லை என்ற அவர். அதே போல, நான் நான் ஊர்ஃபி ஜாவேதை காப்பியடிக்கவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











