ஒரு ஓவியம் வரைந்த ஓவியம்.. மௌனி ராயை புகழ்ந்த ரசிகர்கள்!

சென்னை : நாகினி மெளனி ராய் தான் வரைத்த ஓவியங்களை தனது இன்ஸ்டா, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான "நாகினி "சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானவர் மௌனி ராய். அழகான மெல்லிய தேகத்தை கொண்ட இவர் நாகம் கேரக்டர்க்கு கச்சிதமாக பொருந்தினார்.

Bollywood actress Mouni painting

பல தமிழ் ரசிகர்களை இதன் மூலம் தன் வசம் ஈர்த்தார். பல ஹிந்தி சீரியல்களில் நடித்தாலும், பத்து படங்களுக்கு மேல் நடித்து, இரண்டு படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு ஊரடங்கு காரணமாக எல்லா சினிமா பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கின்றனர். அவர்கள் செய்யும் அன்றாட வேலைகளை அதில் பதிவிட்டும் வருகின்றனர். அதனை follow செய்வதற்கென்றே ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அதன் மூலம் முன்பை விட இந்த லாக்டவுன் சமயத்தில் followers அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. நிச்சயமாகவே இது ஒரு லாக்டவுன் பரிசு தான்.

Bollywood actress Mouni painting

அந்த வகையில் மௌனி ராயும் தனது திறமைகளை காட்டிவருகிறார். அவர் வரையும் பல ஓவியங்களை தனது இன்ஸ்டா, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மௌனி வெளியிடும் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் வரையும் ஓவியங்கள் பெரும்பாலும் பெண்கள் சார்ந்த சாயலில் இருப்பது கூடுதல் சிறப்பு.

Bollywood actress Mouni painting

மௌனி அதிக இறைபக்தி கொண்டவர் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் பகவத் கீதையை ஒரு ஒரு வரியாக அண்டர்லைன் செய்து அதன் அர்த்தத்தை படித்து வருகிறார். அவர் வரைந்த ஓவியங்களும் கடவுளின் படமாக இருப்பது கூடுதல் பலம். இந்த புகைப்படங்களின் மூலம் அவர் அதிக கடவுள் பக்தி கொண்டவர் என்பது நிரூபணமாகிறது.

Bollywood actress Mouni painting

இது போன்ற பல படங்களை மௌனி ராய் வெளியிட்டு உள்ளார். அவர் டேபிள் அருகில் நின்றுகொண்டு படம் வரையும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஓவியம் போல் இருக்கும் மௌனிக்கு ஓவியம் கூட வரைய தெரியுமா என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X