66 வயதில் பாலிவுட் நடிகை கர்ப்பமா? இணையத்தில் வெளியான போட்டோஸ்!

மும்பை: பாலிவுட் பழம்பெரும் நடிகையான நீனா குப்தா கர்ப்பமாக இருக்கிறார் என்கிற செய்தி இந்தி ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அதற்கு நடிகை நீனா குப்தா சரியான பதிலளித்துள்ளார்.

பாலிவுட் பழம்பெரும் நடிகையான நீனா குப்தா ஏராளமான படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் "வோ சோக்கிரி" படத்தில் சிறப்பாக நடித்ததற்காக துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றோர். நீனா குப்தாவின் மகள் மசாபா குப்தா, நடிகர் சத்யதீப் மிஸ்ராவை கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை நீனா குப்தாவிற்கு தற்போது 66 வயது ஆகின்ற போதும், தொடர்ந்து இந்த காலத்து இளம் நடிகர்களுக்கு அம்மா, பாட்டி ரோலில் நடித்துள்ளார்.

bollywood actress Neena Gupta
Photo Credit:

பிரபலமான நடிகை: நடிகை நீனா குப்தா, கடந்த 2022ம் ஆண்டு வெளியான 'லஸ்ட் ஸ்டோரீஸ்' இரண்டாம் பாகத்தில், நடிகை மிருளானி தாகூரின் பாட்டியாக நடித்திருந்தார். திருமணம் வேண்டாம் என்று வெறுத்த மிருளானி தாகூருக்கு, விவகாரமான மேட்டர் விஷயத்தை பேசி, திருமண ஆசையை ஏற்படுத்தி இருந்தார். பாட்டி கொடுத்த அட்வைசால், திருமணத்திற்கு முன் டெஸ்ட் டிரைவ் போகிறேன் என்று ஓட்டலில் அறையில் எடுத்து தங்கும் அளவிற்கு சென்றுவிடுவார் மிருளானி. லஸ்ட் ஸ்டோரிஸ் பார்த்த பலர், பழம் பெரும் நடிகை இப்படி ஒரு ரோலில் நடிக்கலாமா என்ற விமர்சனம் எடுத்த போதும் அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை.

கர்ப்பமா: இந்நிலையில், நடிகை நீனா குப்தா, நடிகை ராஷ்மிகா, விஜய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தன் கணவருடன் கலந்து கொண்டார். அந்த போட்டோவில் நடிகை நீனா குப்தாவின் வயிறு சற்று பெரிதாக இருந்ததால், அவரை பார்த்த பலரும் நீனா குப்தா கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி இணையத்தில் பரவியது. இதுகுறித்து நீனா குப்தா பதில் அளித்துள்ளார். அதில், இதெல்லாம் ஒரு செய்தியா, இது எந்த நல்ல செய்தியும் இல்லை, நான் கர்ப்பமாக இல்லை. அப்படி வதந்தி பரவுவதற்கு காரணம். நான் திடீரென உடல் எடை அதிகரித்துவிட்டேன். அதனால் தான், வயிறு பருமனாக தெரிகிறது. ஆனால், இந்த வயதில் நான் கர்ப்பமாக இருக்கிறேன் போன்ற வதந்தி எனக்கு பிடித்திருக்கிறது என்று நீதா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X