வெறும் குழந்தை பெத்துக்கவும்.. புருஷனை சந்தோஷப்படுத்தவும் அந்த மேட்டர் இல்ல..பிரபல நடிகை ஓபன் டாக்!

சென்னை: என்னத்தான் இந்த காலகட்டத்தில் பெண்கள் சுதந்திரமாக இருந்தாலும், பெண்களுக்கு என்று சில விஷயங்கள் வரையறை செய்யப்பட்டு இருக்கு. இந்த விஷயத்தை தான் பெண்கள் பேசணும், அந்த மாதிரியான விஷயத்தை எல்லாம் பெண்கள் பேசவே கூடாது என்று, அவர்களுக்குள்ளேயே ஒரு வரைமுறை இருக்கு, குறிப்பாக, அந்தரங்கமான விஷயத்தைப் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேசக்கூடாது என்று ஒரு வரைமுறையை வைத்து இருக்கிறார்கள். ஆனால், பிரபல நடிகை ஒருவர் அந்தரங்கமான விஷயத்தை பொது இடத்தில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

பாலிவுட் பழம்பெரும் நடிகையான நீனா குப்தா ஏராளமான படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் "வோ சோக்கிரி" படத்தில் சிறப்பாக நடித்ததற்காக துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றோர். நீனா குப்தாவின் மகள் மசாபா குப்தா , நடிகர் சத்யதீப் மிஸ்ராவை கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை நீனா குப்தாவிற்கு தற்போது 65 வயது ஆகின்ற போதும், தொடர்ந்து இந்த காலத்து இளம் நடிகர்களுக்கு அம்மா, பாட்டி ரோலில் நடித்துள்ளார்.

Neena Gupta interview

லஸ்ட் ஸ்டோரீஸ் 2: நடிகை நீனா குப்தா, கடந்த 2022ம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தில், நடிகை மிருளானி தாகூரின் பாட்டியாக நடித்திருந்தார். திருமணம் வேண்டாம் என்று வெறுத்த மிருளானி தாகூருக்கு, விவகாரமான, மேட்டர் விஷயத்தை பற்றி எல்லாம் பேசி, திருமண ஆசையை கொண்டு வந்து, கடைசியில், பாட்டி கொடுத்த அட்வைசால், திருமணத்திற்கு முன் டெஸ்ட் டிரைவ் போகிறேன் என்று ஓட்டலில் அறை எடுத்து தங்கும் அளவிற்கு சென்றுவிடுவார் மிருளானி. லஸ்ட் ஸ்டோரிஸ் பார்த்த பலர், பழம் பெரும் நடிகை இப்படி ஒரு ரோலில் நடிக்கலாமா என்றும், இதெல்லாம் தேவையா என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

வெறும் குழந்தை பெத்துக்கத்தானா: இதேபோல பழம் பெரும் நடிகை நீனா குப்தா, இந்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பொது இடத்தில் பேசத் தயங்கும், அந்தரங்க விஷயம் பற்றி பேசி உள்ளார். இதில், இந்தியாவில் உள்ள 99 அல்லது 95 சதவீதம் பெண்களிடம் இந்த மோசமாக உணர்வு இருக்கிறது. அவர்களில் பெரும்பாலோருக்கு உடல் உறவு என்றால் என்ன என்று தெரியவில்லை. உடலுறவு தங்கள் மகிழ்ச்சிக்கானது என்பதை நினைக்கவில்லை. உடலுறவு என்பது ஆணின் இன்பத்திற்காகவும், இனப்பெருக்கத்திற்காக மட்டுமே என்று நினைக்கிறார்கள்.

Neena Gupta interview

விளாசும் நெட்டிசன்ஸ்: அதே போல அந்தரங்கம் குறித்து அவர்கள் பேச தயங்குகின்றனர். மேலும், அதுபற்றி பெண்களுக்கு ஆர்வம் இருக்கும் போது, இதை பொது இடத்தில் பேசுவதை தவறாக நினைக்கின்றனர். பெண் அந்த விஷயத்தை மிகவும் மிகைப்படுத்தப்பட்ட விஷயமாக பார்க்கின்றனர் என அந்தரங்க விஷயம் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். இந்த பேட்டியைப் பார்த்த பலர், நீனா குப்தா சொல்வது போல தாம்பத்யம் என்பது மிகவும் மதிக்கப்பட வேண்டியது. அதற்காக அது குறித்து பொது இடத்தில் விவாதிப்பது என்பது சரியானதாக இருக்காது என்றும், நடிப்பில் திறமை பெற்று தேசிய விருதை வாங்கிய ஒரு நடிகைக்கு இது அழகு இல்லை என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X