பாகுபலி பட "மனோஹரி" பாடல் புகழ் நடிகை விபத்தில் சிக்கினார்.. நொறுங்கிய கார்!
மும்பை: பாலிவுட் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நோரா ஃபதேஹி. இவர் பாகுபலி படத்தின் மூலம் அனைவருக்கும் பிடித்த நடிகையாக மாறிப்போனார். தனது தனித்துவமான கவர்ச்சி நடனத்தால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர், தற்போது கார் விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட் நடிகையான நோரா ஃபதேஹி ஹிந்தியில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் "மனோஹரி" பாடலுக்கு பிரபாஸ் உடன் கலக்கலாக நடனமாடினார். அந்த படத்திற்குபின், சல்மான் கான், வருண் தவான் போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது முதல் முறையாக தமிழ் சினிமா பக்கம் தன் கவனத்தை திரும்பியுள்ள நோரா ஃபதேஹி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருடன் பூஜா ஹெக்டேவும் இணைந்து நடிக்கிறார்.

நோரா ஃபதேஹி : இந்நிலையில், நேற்று நோரா ஃபதேஹி மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். இதில் அவர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். நேற்று நோரா மதியம் புறநகர்ப் பகுதியான அம்போலியில் உள்ள லிங்க் சாலையில் காரில் சன்பர்ன் இசை விழாவில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போது, வினய் சாக்பால் என்பவரின் கார் வேகமாக மோதி உள்ளது. விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
நான் நலமுடன் இருக்கிறேன்: இதையடுத்து நடிகை, நோரா ஃபதேஹி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டபின் பிரச்சனை எதுவும் இல்லை என்பதால், இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த விபத்து குறித்து நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நண்பர்களே, நான் நலமாக இருக்கிறேன். நான் பெரிய கார் விபத்தில் சிக்கியிருந்தேன். குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்ற ஒருவர் எனது கார் மீது மோதிவிட்டார்.. நான் உயிருடன் இருக்கிறேன். சில சிறிய காயங்கள் உள்ளன. தயவு செய்து குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள் என்று நடிகை அதில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











