'பிரபாஸ் 20' படத்தில் அதென்ன சுவாரஸ்யமான கேரக்டர்? பாலிவுட் முன்னாள் ஹீரோயின் சொல்றதை கேளுங்க!
சென்னை: பிரபாஸ் படத்தில் சுவாரஸ்யமான கேரக்டரில் நடிக்கிறேன் என்று பிரபல பாலிவுட், முன்னாள் ஹீரோயின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
'பாகுபலி' மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர், தெலுங்கு ஹீரோ பிரபாஸ். இதை தொடர்ந்து மெகா பட்ஜெட் படமான 'சாஹோ'வில் நடித்தார்.
இதில் ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

பூஜா ஹெக்டே
தமிழ், தெலுங்கு, இந்தியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவானது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து இந்தப் படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸின் அடுத்த படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார். இதை கே கே ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின்.

லாக்டவுன்
பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது. இதன் ஷூட்டிங், ஜார்ஜியாவில், நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்பும் இதன் ஷூட்டிங் அங்கு நடந்தது. அதில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக இந்தியா திரும்பினர்.

தனிமைப்படுத்தி
ஜார்ஜியாவில் இருந்து ஐதராபாத் திரும்பிய நடிகர் பிரபாஸ், யாரையும் சந்திக்காமல் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராமில், அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில், பாலிவுட் முன்னாள் ஹீரோயின் பாக்யஶ்ரீ முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு, கன்னடம்
இவர் சல்மான் கானுடன், மைனே பியார் கியா படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனிக்கப்பட்ட இவர், சிறு வயதிலேயே திருமணம் செய்துகொண்டதால், பின்னர் அதிக படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ள பாக்யஶ்ரீ, இப்போது பிரபாஸ் படத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியானது.

கற்றுக் கொண்டேன்
அதை உறுதிப்படுத்தியுள்ள பாக்யஶ்ரீ, நான் சுவாரஸ்யமான வேடத்தில் நடிக்கிறேன். இதற்காக சில விஷயங்களை கற்றுக்கொண்டேன். அது என்ன கேரக்டர் என்பதை இப்போது சொல்ல இயலாது. லாக்டவுன் அறிவிக்கப்படுவதற்கு முன்புதான் இதன் ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். லாக்டவுனுக்குப் பிறகு தொடர்ந்து அந்தப் படத்தில் நடிப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











