ஜவஹர்லால் நேரு குடும்பம் குறித்து சர்ச்சை கருத்து... பிரபல நடிகை அதிரடி கைது! பரபரப்பில் பாலிவுட்!

மும்பை: மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பிரபல நடிகை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை பாயல் ரோஹத்கி 20க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி டைம் லைனில் இருந்து வருகிறார் பாயல்.

காங்கிரஸ் மற்றும் நேரு-காந்தி குடும்பத்தை குறிவைத்து சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான இவர் ட்விட்டரில் தன்னை ஒரு வலதுசாரி என்று காட்டிக்கொள்கிறார்.

சமூகப் பிரச்சனை

சமூகப் பிரச்சனை

பசு வதைக்கு தடை விதிக்கவில்லை என்று கேரள மக்களை விமர்சித்ததால் தலைப்பு செய்தியானார். அதன்பிறகு, நடிகை முத்தலாக் சட்டம் குறித்த தனது கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து சமூகப் பிரச்சினைகள் குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

சர்ச்சைக்குரிய வீடியோ

சர்ச்சைக்குரிய வீடியோ

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மோதிலால் நேரு குறித்தும், ஜவகர் லால் நேரு பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

லால் பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி

ஜவகர் லால் நேரு மனைவியின் நடத்தை குறித்து அவதூறு பரபரப்பியதாகவும் கூறப்பட்டது. மேலும் லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும், கருத்துகளையும் நடிகை பாயல் ரோஹத்கி பதிவு செய்திருந்ததாகவும் தெரிகிறது.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், 66 மற்றும் 67 ஆகிய பிரிவுகளில் நடிகை பாயல் ரோஹத்ஹி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

டிவிட்டரில் தகவல்

டிவிட்டரில் தகவல்

இந்நிலையில் நடிகை பாயல் ரோஹத்ஹி இன்று கைது செய்யப்பட்டார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் கூகுள் தகவல்களை வைத்து மோதிலால் நேரு குறித்து வீடியோ வெளியிட்டதற்காக ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளேன்.

பிரதமருக்கு டேக்

பேச்சு சுதந்திரம் என்பது நகைச்சுவையாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது இந்த டிவிட் பதிவில்லை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் டிவிட்டர் ஹேன்ட்டில்களை டேக் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X