ஓட்டலில் சர்வர் வேலை.. ஒரு நாளைக்கு ரூ.50 சம்பளம்.. தற்போது கோடியில் புரளும் பாலிவுட் நடிகை!

மும்பை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ராக்கி சாவந்த், தமிழில் என் சகியே, முத்திரை, கம்பீரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சினிமாவில் தான் கடந்து வந்த பாதை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஓவராக கவர்ச்சி காட்டும் ராக்கி சாவந்த், தனது இன்ஸ்டாகிராம் பாலோவர்களை அதிகரிக்க கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் 2019 ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரான ரித்தேஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் அவர் ஏமாற்றி விட்டதாக மீடியா முன் கதறி அழுதார். இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு ஆதில் துரானி என்பவரை காதலித்து வந்த நிலையில் இஸ்லாமிய முறைப்படி அவரை திருமணம் செய்து கொண்டார்.

Bollywood actress Rakhi Sawant who earned a daily salary of Rs 50

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்: இதையடுத்து தனது கணவர் ஆதில், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது நிர்வாண வீடியோவை ஆதில் பல கோடிக்கு விற்றுவிட்டதாக புகார் கூறினார். இதையடுத்து, போலீசார் ஆதில் துரானியை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். பின் ஆதில் துரானியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். விவாகரத்து பெற்றதை ஆட்டம் பாட்டம், மேளதாளத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

தினமும் ரூ.50 சம்பளம்: இந்நிலையில், இந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ராக்கி சாவந்த், குடும்ப சூழ்நிலை காரணமாக 10 வயதில் இருந்தே வேலை செய்து வருகிறேன். மும்பையில் ஒரு ஓட்டலில் உணவு பரிமாறும் வேலை செய்தேன். அதற்கு ஒரு நாளைக்கு ரூ.50 சம்பளம் கிடைத்தது. சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், நான் சினிமாவில் நடிப்பது என் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி சினிமாவில் நடித்தேன்.

Bollywood actress Rakhi Sawant who earned a daily salary of Rs 50

அறுவை சிகிச்சை செய்தேன்: கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க ஆவலாக இருந்த எனக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. நிறம் குறைவாக வாய்ப்பு கிடைக்கல, அதன் பிறகு, உடல் மற்றும் முக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டேன். சிகிச்சைக்கு பிறகு தான் எனக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அதன் பிறகு அக்னிசக்கரா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகான ராக்கி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தேன் என்றார்.

சொத்து மதிப்பு: ரூ.50 சம்பளம் வாங்கிய ராக்கி சாவந்த்திற்கு இப்போது மாச சம்பளம் 50 லட்சம் வருமானம் வகிறதாம். இன்ஸ்டாகிராமில் விளம்பரங்கள், பிராண்ட் விளம்பரம் மற்றும் பிக் பாஸ் 14 வீட்டிற்குள் இருந்ததற்காக அவர் வாரத்திற்கு 1.5 லட்சத்தை அவர் சம்பளமாக பெற்றார். Mercedes-Benz, BMW X5 என விலை உயர்த்த சொகுசு கார்களை வைத்து இருக்கும் இவரின் சொத்து மதிப்பு, 41.65 கோடி உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X