கார் விபத்து பஞ்சாயத்து.. எல்லாமே பொய்.. ரவீனா டாண்டன் மது அருந்தவில்லை.. மும்பை போலீஸ் விளக்கம்!

மும்பை: பாலிவுட் பிரபல நடிகை ரவீனா டாண்டன் கார் மோதி பெண் ஒருவர் காயமடைந்ததாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்த வழக்கை விசாரித்த மும்பை போலீசார், அப்பகுதியில் சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்தனர், அதில், கார் அந்த பெண் மீது மோதவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் நடிகை ரவீனா டாண்டன் மது அருந்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே தெரிந்த முகமாக இருந்த ரவீனா டாண்டன், கேஜிஎஃப் படத்தில் நடித்ததன் மூலம் இன்றைய தலைமுறையினருக்கும் தெரிந்த முகமாக மாறினார். அந்த படத்தில், ரமிகா சென் என்ற கேரக்டரில் துணிச்சல் மிகுந்த பெண் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, பாட்னா சுக்ரா, வெல்கம் டூ ஜங்கில், சுட்டிஜாடி ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

Raveena Tandon Bollywood Car accident

பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன்: மும்பையில் வசித்து வரும் ரவீனா டாண்டன், ஜூன் 1ஆம் தேதி இரவு, அவரது வீட்டில் கார் ஓட்டுநர், ரிவர்ஸ் எடுத்து காரை பார்க் செய்யும் போது, சாலையோரம் வந்து கொண்டிருந்த குடும்பத்தினர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, அந்த குடும்பத்தினர் டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த ரவீனா டாண்டன், அந்த குடும்பத்தினருடன் வாதிட்டுள்ளார்.

மதுபோதையில் இருந்தார்: அவர் எவ்வளவு சமாதானம் செய்தும், அந்த குடும்பத்தினர் சமாதானம் ஆகாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த குடும்பத்தினர் டிரைவரை அடிக்க பாய்ந்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ரவீனா டாண்டன், அடிக்காதீங்க, அடிக்காதீங்க என கத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, காயமடைந்த பெண் மும்பை காவல் நிலையத்தில், காரை ரிவர்ஸ் எடுக்கும் போது மோதிவிட்டதாகவும், இதற்காக நியாயம் கேட்ட போது ரவீனா டாண்டன் மது போதையில் இருந்ததாகவும் புகார் அளித்திருந்தார்.

பொய்யான புகார்: இதுகுறித்து விசாரித்த மும்பை ககர் நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி வீடியோவை ஆய்வுசெய்தனர். அதில், சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, ரவீனா டாண்டனின் கார், யார் மீதும் மோதவில்லை என்றும், யாரும் காயமடையவில்லை, அதோடு அந்த சம்பவம் நடந்த போது ரவீனா, மது போதையில் இருந்ததாக சொல்லப்படுவது பொய் என்றும், அவர் மது போதையில் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். பணம் பறிக்க வேண்டும் என்பதற்காக அந்த குடும்பம் பொய்யான புகாரை கொடுத்துள்ளதாகவும் போலீசார் விளக்கம் கொடுத்து. சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளர்.

ஆளவந்தான்: நடிகை ரவீனா டாண்டன், தமிழில் பி.வாசு இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளியான சாது படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானர். இதைத் தொடர்ந்து, கமலுக்கு ஜோடியாக ஆளவந்தான் படத்தில் நடித்திருந்தார். அப்போது வரவேற்பை பெறாத அந்த திரைப்படம் அண்மையில் ரீ ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X