ஐஸ்வர்யா ராய் -அபிஷேக் பச்சன் விவாகரத்து சர்ச்சை.. பின்னால் இருந்து செயல்படும் பாலிவுட் நடிகை?

மும்பை: பாலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், தன்னுடைய காதல் கணவர் அபிஷேக் பச்சனை பிரியவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து இருவரும் வெளிப்படையாக பேசாமல் மௌனம் சாதித்து வருகின்றனர்.

ஆனாலும் இவர்களின் பிரிவை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற அம்பானி குடும்பத்து திருமணத்தில் தன்னுடைய பெற்றோருடன் அபிஷேக் பச்சன் பங்கேற்ற நிலையில், தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் தனியாக பங்கேற்ற ஐஸ்வர்யா ராய், தன்னுடைய மாமியார் உள்ளிட்ட யாருடனும் பேசாமல் ஒதுங்கியிருந்தார்.

Aiswarya rai Abishek bachan Rekha Bollywood cinema

நடிகை ஐஸ்வர்யா ராய்: நடிகை ஐஸ்வர்யா ராய், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் சிறப்பான பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஹிட் கொடுத்தவர். தமிழில் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், எந்திரன் படங்களிலும் இவர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தார். பாலிவுட்டிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், ஒரு கட்டத்தில் தன்னுடன் தாய் அக்ஷர் பிரேம் கே உம்ராவ் ஜான் படங்களில் இணைந்து நடித்த அபிஷேப் பச்சனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சில வருட டேட்டிங்கிற்கு பிறகு கடந்த 2007ம் ஆண்டில் இவர்களது திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் தம்பதி: இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் மனமொத்த தம்பதிகளாகவே வாழ்ந்தனர். தன்னுடைய மகள்மீது மிகுந்த பாசத்துடன் ஐஸ்வர்யா இருந்து வந்தார். இந்நிலையில் மாமியார் ஜெயா பச்சன் மற்றும் ஐஸ்வர்யா இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாகவும் அதுவே குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட காரணம் என்றும் கூறப்படுகிறது. 3000 கோடிகளுக்கும் மேல் சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் அமிதாப் பச்சன், சமீபத்தில் தன்னுடைய ஜூஹு பங்களாவை தன்னுடைய மகள் ஸ்வேதா நந்தாவிற்கு பரிசளித்ததும் பிரச்சினைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் -ரேகா சந்திப்பு: தற்போது அபிஷேக் பச்சன் விவாகரத்து பதிவு ஒன்றிற்கு லைக் செய்துள்ளார். இதனால் இவர் ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து பெறப்போவது உறுதியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சனின் முன்னாள் காதலி என்று கூறப்படும் நடிகை ரேகா இந்த விஷயத்தில் காய் நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் தன்னுடைய மாமியா ஜெயா பச்சனை சந்தித்து பேசாத ஐஸ்வர்யா ராய், மாறாக, பழம்பெரும் நடிகையான ரேகாவை சந்தித்து கட்டியணைத்து தன்னுடைய உற்சாகத்தை பதிவு செய்திருந்தார்.

சகிப்புத்தன்மை குறைந்ததா?: இருவரும் காதுகளில் கிசுகிசுத்துக் கொண்டதும் பேசுபொருளானது. இவர்கள் முன்னதாகவும் பொதுவெளியில் இதுபோல நடந்துக் கொண்டுள்ளனர். இந்தநிகழ்வுகளை பார்த்த நெட்டிசன்கள், அமிதாப் பச்சன் வீட்டின் இந்த பிரச்சினைக்கு நடிகை ரேகாதான் காரணமாக அமைந்துள்ளதாக கூறி வருகின்றனர். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் ஜெயா பச்சனுக்கு எதிரியான ரேகா தற்போது ஐஸ்வர்யா ராயுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திரையுலகில் நட்சத்திர தம்பதிகளுக்குள்ளே தொடர்ந்து சகிப்புத்தன்மை குறைந்து வருவதை சமீபத்திய பல விவாகரத்து நிகழ்வுகள் காட்டி வருகின்றன. இதன் ஒரு சாட்சியாக ஐஸ்வர்யா ராய் -அமிஷேக் பச்சனும் இணைவார்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X