Actor Simbu: STR48 படத்தில் இணையும் பாலிவுட் நடிகைகள்.. கலர்புல் காம்பினேஷன்தான்.. ஆனா சூட்டிங்?

சென்னை: நடிகர் சிம்பு -தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது எஸ்டிஆர் 48 படம். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்ட சூழலில் தொடர்ந்து இந்த ஆண்டு மே மாதம் இன்னும் சில தினங்களில் நிறைவடையுள்ள சூழலிலும் படத்தின் சூட்டிங் குறித்த எந்தவிதமான அப்டேட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளது,

இதனிடையே இந்த படத்திற்காக நீண்ட காலங்களாக காத்திருந்த சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அதன் பின்பே, எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள எஸ்டிஆர் 48 படம் வரலாற்று பின்புலத்தில் உருவாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இணையவுள்ள நாயகிகள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Bollywood actress seems to be join with Simbu in STR 48 movie

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்திருந்தார். பத்து தல படத்திற்கு பிறகு கொரோனா குமார் படத்தில் சிம்பு இணையவுள்ளதாக கூறப்பட்ட சூழலில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படாமலே நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த பிரச்சனைகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இணைந்திருந்தார் சிம்பு. இந்த படத்தின் சூட்டிங் இதோ அதோ என்று தொடர்ந்து தாமதப்பட்டு வருகிறது.

STR48 படம்: படத்திற்கு பிரம்மாண்டமான செட் வேலைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் படத்தின் 90% சூட்டிங் செட் போடப்பட்டு நடத்தப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்சை வெளிநாடுகளில் பயின்று வந்த சிம்பு, படத்திற்காக நீண்ட தலைமுடி உள்ளிட்ட பல்வேறு கெட் அப் மாற்றங்களை செய்திருந்தார். வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து மாஸ் காட்டியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரு வேறு கெட்டப்புகளில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

பாலிவுட் நடிகைகள்: இதையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிரடி சரவெடியாக வெளியானது. ஆனாலும் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போவதால் தற்போது கமல்ஹாசனுடன் தக் லைஃப் பட ஷூட்டிங்கில் இணைந்துள்ளார் சிம்பு. இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்ததாக எஸ்டிஆர் 48 படத்தில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் நாயகிகள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. படம் சர்வதேச அளவில் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகவுள்ள சூழலில், இந்த படத்தில் பாலிவுட் நாயகிகள் கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் சிம்புவிற்கு ஜோடியாக இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழில் என்ட்ரி: பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஜான்வி கபூர், அடுத்ததாக தமிழில் இணையவுள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்துவரும் சூழலில், தமிழில் அவர் சிம்புவிற்கு ஜோடியாக உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விஷயமாகவே அமைந்துள்ளது. படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கும் சூழலில் விரைவில் சூட்டிங் அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X