பிகினியில் சன் பாத்.. சூடேற்றும் ஷாமா சிக்கந்தர்.. வைரல் பிக்ஸ்!
மும்பை : தனது கவர்ச்சிப் புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு தனது ரசிகர்களை எப்போதும் கொண்டாட்டத்தில் வைத்திருக்கும் நடிகை ஷாமா சிகந்தர்.
இவர் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கடற்கரை பிகினி சூடே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மொட்டை மாடியில் ஹாயாக பிகினி டிரஸில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெளியான சில மணி நேரத்திலேயே இந்த புகைப்படம் பலரையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படங்களை
ஹிந்தியில் டிவி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான ஷாமா சிகந்தர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் வேளையில் அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக ஹாட்டான புகைப்படங்களை அவ்வபோது தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வருகிறார்.

வெற்றியுடன்
"யா மேரி லைஃப் ஹே" என்ற டிவி தொலைக்காட்சி தொடரின் மூலம் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ஷாமா சிகந்தர் தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று வெற்றியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பைபாஸ்
பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக்கொண்டிருந்த ஷாமா சிகந்தர் அமீர்கான் நடித்த மான் போன்ற படங்களிலும் நடித்து வந்துள்ளார். மேலும் இவர் சமீபத்தில் பைபாஸ் ரோடு என்ற படத்திலும் நடித்துள்ளார்.

நடித்துக் கொண்டு
இவ்வாறு தொலைக்காட்சி தொடர்களிலும் படங்களிலும் மாறி மாறி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஷாமா சிகந்தர் அவ்வப்போது தனது படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாகியும் வருகிறார்.

சன் பாத்
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ஒன்று அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கோடை காலத்தில் இவர் பிங்க் கலர் பிகினி உடையை அணிந்து கொண்டு மற்றற்ற கவர்ச்சியுடன் மொட்டை மாடியில் ஹாயாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு, கையிரண்டையும் ஸ்டைலாக தலையில் வைத்துக்கொண்டு கூலிங் கிளாஸ் உடன் சன் பாத் எடுக்கும் இந்த புகைப்படம் கவர்ச்சி கடலில் அனைவரையும் மூழ்கடித்துள்ளது.

சந்தோசத்தில்
எனவே அடுத்தடுத்த போட்டோகளை எப்பொழுது பதிவிடுவார் என வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கும் இவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு சந்தோசத்தில் சிறகடித்துப் பறந்து வருகின்றனர்.

சூரியன் முத்தமிட்டு
இவரை வஞ்சனையில்லாமல் எப்போதும் வர்ணித்து வரும் இவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தையும் ஏகபோகமாக வர்ணித்துள்ளனர். அதில் ஒருவர் உலகிலேயே மிகவும் பரபரப்பாக உள்ள சூப்பர் க்யூட் மாடலை சூரியன் முத்தமிட்டு உள்ளது என வார்த்தைகளால் வர்ணித்து உள்ளார்.
Recommended Video

ரசிகர்கள் கலாய்
இவ்வாறு பலரும் இவரை பாராட்டியும் வர்ணித்து வரும் வேளையில் இந்த புகைப்படம் சுவிட்சர்லாந்தில் சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என இந்த பதிவில் குறிப்பிடப்பட்ட நிலையில் பலரும் அதில் இருந்த ஸ்விட்சர்லாந்து என்ற பெயரின் எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டி கலாய்த்து வந்தனர். இதை கண்ட ஷாமா சிகந்தர் அந்த சுவிட்சர்லாந்து எழுத்துப்பிழை உடனடியாக திருத்தி விட்டு கமுக்கமாக இருந்து கொண்டார்


Click it and Unblock the Notifications











