ரகசியமாக நடந்த அறுவை சிகிச்சை.. மார்பக இம்ப்ளாண்டை நீக்கிய ஷெரீன் சோப்ரா.. ரசிகர்கள் ஷாக்!

சென்னை: மாடல் அழகியும், நடிகையுமான ஷெர்லின் சோப்ரா மார்பக அறுவை சிகிச்சை செய்துள்ளார்..
நீண்ட காலமாக முதுகு, கழுத்து, மார்பு மற்றும் தோள் வலி காரணமாக தனது மார்பகத்தில் பொருத்தப்பட்டு இருந்த இம்ப்ளாண்டுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ளார். தேவையற்ற அதிக சுமையாக இருந்ததால், இந்த முடிவை எடுத்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை ஷெர்லின் சோப்ரா, 2005 ஆம் ஆண்டு வெளியான 'டைம் பாஸ்' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் 'ரெட் ஸ்வாக்', 'வாணி', மற்றும் 'காம்சூத்ரா 3டி' போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகை ஷெர்லின் சோப்ரா, மார்பகத்தை பெரிதாக்குவதற்கான சில ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை பெரிதாக்கினார். ஆரம்ப காலத்தில் இதனால், எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாத நிலையில், கடந்த சில மாதங்களாக முதுகு, கழுத்து, தோள் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

Sherlyn Chopra breast surgery
Photo Credit:

நடிகை ஷெர்லின் சோப்ரா: இதனால், அவதிப்பட்டு வந்த ஷெர்லின் சோப்ரா மார்பகத்தில் பொருத்தப்பட்டு இருந்த, இம்ப்ளாண்டுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள அவர், வலிகள் அனைத்தும் நீங்கி, உடல்நலம் மிகவும் லேசாக இருப்பது போல உணர்கிறேன் என கூறியுள்ளார். இவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஷெர்லினின் விரைவான குணமடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மார்பக அறுவை சிகிச்சை: நடிகை ஷெர்லின் சோப்ரா தனது மார்பக breast implant அகற்றியதால், இந்த அறுவை சிகிச்சை பற்றி பலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, பிரபலமான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர டாக்டர். நிதித் மிஸ்திரி விளக்கம் கொடுத்துள்ளார். மார்பக உள்வைப்புகளை அகற்றுவது ஒரு பாதுகாப்பான நடைமுறை தான். பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் இதைத் தேர்வு செய்கிறார்கள், சிலருக்கு பழைய உள்வைப்புகளை அகற்றி விட்டு புதியவற்றால் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம். இன்னும் சிலரோ மார்பக உள்வைப்பு நோய் அறிகுறிகளை இதை செய்யலாம், இதைத் தவிர, அழகியல் சார்ந்த காரணங்களுக்காகவோ அல்லது வாழ்வியல் மாற்றங்கள் காரணமாகவோ கூட இம்ப்ளாண்டுகளை மாற்றிக்கொள்ளலாம்,

மார்பக இம்ப்ளாண்டுகளை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும்போது, உள்வைப்பைச் சுற்றியுள்ள கேப்சூலை (capsule) அகற்றுவதும் மிகவும் முக்கியமாகனது. அதே போல, மார்பக உள்வைப்பு அகற்றல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மார்பகத்தின் தோற்றம் மாறக்கூடும் என்று மருத்துவர் டாக்டர் மிஸ்திரி தெளிவாக விளக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X