திருமணம் குறித்த ரசிகரின் கேள்வி... சோனாக்ஷியின் வேற லெவல் பதில்

மும்பை : பாலிவுட்டின் சிறப்பான நடிகையாக விளங்கி வருகிறார் சோனாக்ஷி சின்ஹா.

இவர் திருமணம் குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் திருமணம் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சோனாக்ஷி அளித்த பதில் வைரலாகி வருகிறது.

நடிகை சோனாக்ஷி சின்ஹா

நடிகை சோனாக்ஷி சின்ஹா

நடிகை சோனாக்ஷி சின்ஹா பாலிவுட்டின் சிறப்பான நாயகியாக காணப்படுகிறார். சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் தமிழிலும் லிங்கா படத்தில் நடித்து ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்துள்ளார். ஒல்லியாக இருக்கும் நாயகிகளே பாலிவுட்டில் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் குண்டாக இருந்தாலும் இவர் வரவேற்பை பெற்று வருகிறார்.

திருமணம் குறித்த கேள்விகள்

திருமணம் குறித்த கேள்விகள்

இவரது திருமணம் குறித்து பல்வேறு யூகங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை தொடர்ந்து ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் கத்ரீனா கையிப் திருமணமும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சோனாக்ஷி சின்ஹாவின் திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜஹீருடன் காதல்?

ஜஹீருடன் காதல்?

இவருக்கு 34 வயதான நிலையில் பாலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகரான ஜஹீர் இக்பாலை இவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் மௌனம் சாதித்துவரும் நிலையில், கடந்த டிசம்பர் 10ம் தேதி ஜஹீரின் பிறந்த நாளையொட்டி சோனாக்ஷி போட்ட பதிவு வைரலானது.

Recommended Video

Dhanush & Aishwarya Separation | Aishwarya போட்ட Tweet - இந்த பிரிவு தேவை | Filmibeat Tamil
பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

இந்த மாதிரி அருமையான மனிதரை உலகில் எங்காவது பார்க்க முடியுமா என்று சோனாக்ஷி உருக்கமாக பதிவிட்டிருந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இவர்கள் இருவரும் இணைந்து டபுள் எக்ஸ் எல் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் குறித்த ரசிகரின் கேள்வி

திருமணம் குறித்த ரசிகரின் கேள்வி

இந்நிலையில் சமீபத்தில் எதுவேண்டுமானாலும் கேளுங்கள் என்ற இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசிய சோனாக்ஷி சின்ஹாவிடம் ரசிகர் ஒருவர், பாலிவுட்டில் பிரபலங்கள் பலரும் திருமணம் செய்து வருகின்றனர், நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

சோனாக்ஷி வித்தியாசமான பதில்

சோனாக்ஷி வித்தியாசமான பதில்

இந்தக் கேள்விக்கு சோனாக்ஷி சின்ஹாவின் வித்தியாசமான பதில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த சோனாக்ஷி, எல்லாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது, எனக்கும் அந்த பாதிப்பு வரவேண்டுமா என்று அவர் வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X