7 ஆண்டு காதல்.. திருமணமான 3 மாதத்தில் இப்படியா? புலம்பும் ரஜினி பட நடிகை!
சென்னை: நடிகை சோனாக்ஷி சின்ஹா பாலிவுட்டின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் தமிழிலும் லிங்கா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார். ஏழு ஆண்டுகளாக ஜாகீர் இக்பாலும் சோனாக்ஷியும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர். இதில்,சோனாக்ஷி குறித்து புலம்பி உள்ளார்
சோனாக்ஷி சின்ஹா திருமணம்: சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் 2022 ஆம் ஆண்டு டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தில் சேர்ந்து நடித்தபோது காதலிக்க துவங்கினர். ஆனால் அதற்கு முன் 2020ம் ஆண்டில் இருந்தே இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. படவிழாக்கள், பொது நிகழ்வுகள் என பல இடத்தில் இருவரும் ஒன்றாக வலம் வந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது நடிகையின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான சத்ருகன் சின்ஹா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சத்ருகன் சின்ஹா மகளின் திருமணத்திற்கு சம்மதித்தார்.

சோனாக்ஷி சின்ஹா-ஜாஹீர் இக்பால் இருவரும் வேறு வேறு மதம் என்பதால், சோனாக்ஷி இஸ்லாம் மதத்திற்கு மாறிதான் ஜாகீர் இக்பால் செய்து கொள்வார் என்று செய்திகள் பரவின. ஆனால், இவர்களின் திருமணம், மும்பையில் பூஜை புணஸ்காரங்களுடன் இந்து முறைப்படி நடைபெற்றது.
3 மாதத்தில் இப்படியா: இந்நிலையில்,சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் கூட்டாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அதில் தொகுப்பாளினி சோனாக்ஷியிடம் உங்கள் கணவரிடம் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் என்ன என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், என் கணவர் தாராள குணம் கொண்டவர், அனைவரிடமும் கனிவுடன் நடந்து கொள்வார். ஆனால், அவரிடம் பிடிக்காத விஷயமாக என்றால், அது அடிக்கடி சத்தம் போடுவது, விசில் அடிப்பது தான். இதனால், வீட்டில் எப்போதும் சத்தமாகவே இருக்கும். இதனால் தான் அமைதிக்காக ஏங்குவதாக சோனாக்ஷி சின்ஹா நகைச்சுவையாக கூறினார். இதனை அவரது ரசிகர்கள் இணையத்தில் கிண்டல் செய்து திருமணமான 3 மாதத்திலேயே இப்படியா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











