படப்பிடிப்பு தளத்தில் காலில் காயம்.. வலி தாங்காமல் கத்திய சன்னி லியோன்.. பதறிய ரசிகர்கள்!
சென்னை : நடிகை சன்னி லியோனுக்கு படப்பிடிப்பு தளத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் பதறிப்போனார்கள்.
நடிகை சன்னி லியோன் ஆபாச படங்கள் மூலம் மிகவும் பிரபலமாகி இருந்தாலும், தற்போது பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சன்னி லியோன் கவர்ச்சிக்கும் கட்டழகுக்கும் இளசுகள் மத்தியில் தனி மவுசு உண்டு. முதல் பட வாய்ப்பை பாலிவுட் திரையுலகில் பிடிப்பது இவருக்கு கடினமானதாக இருந்தாலும், தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டார்.

நடிகை சன்னி லியோன்
ஹாலிவுட்டில் வெளியான ஃபார்ன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன் இப்பொழுது இந்திய திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இந்தியில் ஏகப்பட்ட படவாய்ப்புகளை குவித்து வருகிறார். 2012 ஆம் ஆண்டு வெளியான ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் தடத்தைப் பதித்த சன்னி லியோன் ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் வியக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.

ஓ மை கோஸ்ட்
நடிகை சன்னி லியோன் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி திரைப்படத்தில் லோ ஆன லைஃபு என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான இவர், ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியானது. இதில், சன்னி லியோன், ஜி பி முத்து, சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோர் நடித்திருந்தனர். ஓ மை கோஸ்ட் படத்தில் சன்னி லியோன் லீட் ரோலில் நடித்திருந்தார்.

காலில் காயம்
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சன்னி லியோனின் வலது கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதைப்பார்த்த, உதவியாளர்கள் ஒடிவந்து அவருக்கு முதல் உதவி செய்தனர். சன்னி லியோன் காலில் அடிப்பட்ட செய்தி இணையத்தில் பரவியதால், அவரது ரசிகர்கள் கவலையடைந்தனர். மேலும், சன்னிக்கு என்ன ஆச்சு, என்ன நடந்தது என்று கேட்டு பதறிப்போனார்கள்.

வலி தாங்காமல் கத்திய சன்னி
இதையடுத்து, படப்பிடிப்பு தளத்தில் சன்னி லியோனுக்கு அடிபட்ட வீடியோ வெளியானது. இதில் கட்டை விரலில், சிறிது தேய்த்துக்கொண்டதால் ரத்தம் வந்துள்ளது. அந்த சிறிய காயத்திற்கே சன்னி வலி தாங்காமல் கத்தி கூப்பாடு போட்டுள்ளார். இதைப்பார்த்த பேன்ஸ் இந்த அடிக்கா இவ்வளவு பில்டப்பு என்று கேட்டு கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











