அதைப் பத்தியெல்லாம் கவலைப்படக் கூடாது.. பாலியல் துன்புறுத்தல் குறித்து போல்டா பேசிய சன்னி லியோன்!
சென்னை: நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தமிழில் அடுத்ததாக வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகும் பேட்ட ராப் படத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் சன்னி லியோன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன்களுக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார் சன்னி லியோன்.
இந்நிலையில் கொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரபுதேவா, சன்னி லியோன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். அப்போது அவர்களிடம் கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதையடுத்து பேசிய சன்னி லியோன் அதிரடியாக பல விஷயங்களை தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பிரபுதேவாவும் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்

நடிகை சன்னி லியோன்: நடிகை சன்னி லியோன் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக பல அதிரடி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவ்வப்போது சில படங்களில் நடித்துள்ள சன்னி லியோன் நடிப்பில் அடுத்ததாக பேட்ட ராப் படம் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து சன்னி லியோன் நடித்துள்ளார். படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்து படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் படத்தின் பிரமோஷன்களுக்காக மும்பையிலிருந்து சன்னி லியோன் சென்னை வந்திருந்தார்.
பேட்ட ராப் படம்: பான் இந்தியா படமாக வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் பேட்ட ராப படம் ரிலீசாகவுள்ளது. இதையடுத்து பிரபுதேவா சன்னி லியோன் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் கொச்சியில் செய்தியாளர் சந்திப்பில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கேரளாவில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து சன்னி லியோனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சன்னி லியோன், நம்முடைய எல்லைகளை நாம் தான் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
நோ சொல்ல வேண்டும்: நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ சொல்ல வேண்டும் என்றும், வெளியேற வேண்டிய இடத்தில் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார். எத்தகைய இழப்புகளை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் மிகவும் தைரியத்துடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் சன்னி லியோன். இதனிடையே இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் பிரபுதேவா, சில ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அதற்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கை: மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் குறித்து எழுந்த புகாரையடுத்து கடந்த 2017ம் ஆண்டில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை கடந்த 2019ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளை கடந்து தற்போதுதான் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதையடுத்து முன்னதாக இதுபோன்ற கசப்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நடிகைகள் தற்போது தைரியமாக பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சிலர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











