பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்… பேஷன் போட்டோஷூட் மூலம் நடிகை கோரிக்கை
டெல்லி: டெல்லியில் மருத்துவமாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் நாடுமுழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அதை வைத்து படத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்பவர்களும் இருக்கின்றனர்.
பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக மாணவர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் கொதித்து எழுந்துள்ளனர். பாலிவுட் நடிகை சுஷானா ரெட்டி இதற்காக ஒரு போட்டோ சூட் நடத்தியிருக்கிறார். இவர் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை தேவை என்று கூறும் இந்த நடிகை, குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் இது நடக்கக் கூடாது
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார் சுஷானா ரெட்டி. குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் தலைநகரில் கொடுமை
இந்தியாவின் தலைநகரில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது வெட்கக் கேடானது என்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சதீஸ் ரெட்டி. பாதிக்கப்பட்ட பெண் மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கிறார். எனவே குற்றவாளிகளுக்கு ஆயுள் அல்லது மரணதண்டனை அளித்தால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று கூறியுள்ளார்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாது
டெல்லியில் பெண்ணிற்கு நடைபெற்ற சம்பவம் வார்த்தைகளால் விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று இயக்குநர் ஹாரூன் ரஷீத் கூறியுள்ளார். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு சட்டப்படி விரைவில் தண்டனை வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

விரைவில் தண்டனை வழங்குக
பாலியல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது விரைவில் தண்டனை வழங்க வலியுறுத்தி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், பிரியங்கா சோப்ரா, கரீனாகபூர், உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











