10 ஆண்டு காதல்.. காதலரை கரம் பிடிக்கும் டாப்ஸி.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் டாப்ஸி, பத்து ஆண்டுகளாக காதலித்து வரும் தனது காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக உள்ளதாகவும், இவர்களின் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரியானார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி, பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார். மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் டாப்ஸி, மிஷன் மங்கள், சாந்த் கி ஆன்க், தப்பத், ஹசீன் தில்ருபா, போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றன. கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட சபாஷ் மிது திரைப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார்.

Bollywood actress Taapsee Pannu Marriage With Boyfriend Mathias Boe

நடிகை டாப்ஸி பன்னு: அண்மையில் இவர், ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்த டங்கி படத்தில் நடித்திருந்தார். இப்படம், டிசம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளியது. இப்படத்தில் டாப்ஸி, விக்கி கெளஷல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

10 ஆண்டு காதல்: பாலிவுட்டின் பிஸியான நடிகையாக இருக்கும் டாப்ஸி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மதியாஸ் போ 10 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இவர்களின் திருமணம் இந்த மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெறும் திருமணத்தில், இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும், அதன் பிறகு ராஜஸ்தானில் பிரம்மாண்ட ரிஷப்ஷன் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் குறித்த வதந்தியா: திருமணம் குறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டாப்ஸி, என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் எப்பொழுதுமே பொது இடத்தில் பேசியது இல்லை என்றார். இனியும் அப்படித் தான் இருப்பேன் என்றார். மேலும், எனக்கு குழந்தைகள் வேண்டும் என்று தோன்றும் போது திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற விரும்பவில்லை என்றார். அப்படி என்றால் திருமணம் குறித்த தகவல் வெறும் வதந்தியா என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X