ப்பா... புடவையிலேயே சும்மா அள்ளுதே...ஹாட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடிக்கும் டாப்ஸி!

சென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் டாப்ஸி, பத்து ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு செம சினிமாவில் படுபிஸியாக இருக்கும் இவர்,சிவப்பு நிற புடவையில் செம க்யூட்டாக இருக்கும் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குள் குவிந்து வருகின்றன.

பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரியானார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி, பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார். மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் டாப்ஸி, மிஷன் மங்கள்,சாந்த் கி ஆன்க், தப்பத், ஹசீன் தில்ருபா, போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றன. கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட சபாஷ் மிது திரைப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார்.

Bollywood actress Taapsee Pannu Mathias Boe photo

நடிகை டாப்ஸி பன்னு: அண்மையில் இவர், ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்த டங்கி படத்தில் நடித்திருந்தார். இப்படம், டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளியது. இப்படத்தில் டாப்ஸி, விக்கி கெளஷல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளியது. காஞ்சனா 2 , வை ராஜா வை, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள டாப்ஸி, 2021ம் ஆண்டு வெளியான 'அனபெல் சேதுபதி' படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் டாப்ஸி நடிக்கவில்லை.

நடிகை டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மதியாஸ் போவை 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். திடீரென நடந்த திருமணம் குறித்து பேசிய டாப்ஸி, என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் எப்பொழுதுமே பொது இடத்தில் பேசியது இல்லை, இனியும் அப்படித் தான் இருப்பேன் என்றார்.

ப்பா.. அழகு அள்ளுதே: இந்நிலையில், நடிகை டாப்ஸி பன்னு, திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக புடவையில் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் தனது இடையழகு தெறியவிட்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து, அவரை வர்ணித்து கவிதை எழுதி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X