நடிகைகள் என்ன மிருகமா?எங்களுக்கும் பர்சனல் இருக்கு..கோபத்தில் கொந்தளித்த நடிகை!

சென்னை : நடிகைகள் மிருகம் இல்லை இவர்களுக்கும் சில பர்சனல் இருக்கிறது என நடிகை டாப்ஸி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். டாப்ஸி தற்போது Blurr என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியானது.

க்ரைம் ,த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் டாப்ஸி அட்டகாசமாக நடித்து அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார்.

நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி

பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை டாப்ஸி. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார். மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார் டாப்ஸி.

ஹிட் படங்களில்

ஹிட் படங்களில்

டாப்ஸி நடித்த மிஷன் மங்கள்,சாந்த் கி ஆன்க், தப்பத், ஹசீன் தில்ருபா, போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றன. டாப்ஸி இந்தியில் சபாஷ் மித்து என்ற படத்தில் நடித்திருந்தார். கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'சபாஷ் மிது' திரைப்படத்தில் மிதாலி ராஜாக டாப்ஸி நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலை வாரிக்குவித்தது.

க்ரைம் த்ரில்லர்

க்ரைம் த்ரில்லர்

டாப்ஸி நடித்துள்ள Blurr திரைப்படம் குறித்து அளித்துள்ள பேட்டியில்,நான் ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த படத்தை பார்வையாளராகத்தான் பார்ப்பேன். ஒரு படத்திற்காக எனது நேரத்தையும் பணத்தையும் செலவிடும் போது பல முறை யோசிப்பேன். அதுப்போலத்தான் பார்வையாளர்களும் இருப்பார்கள் என்றார். இப்படத்தில், பார்வை இழந்த பெண்ணாக நடித்து இருக்கிறேன்.

இந்த கதாபாத்திரத்திற்காக நான் மணிக்கணக்கில் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தேன். அதன் பிறகு தான் என்னால் அதிகம் கேட்க முடிந்தது, சிந்திக்க முடிந்தது, பார்க்க முடியாத போதுதான் உங்கள் மற்ற புலன்கள் தானாகவே சமநிலையில் இருக்கும் என்பதை உணர முடிந்தது என்று Blurr திரைப்படம் குறித்து பேசினார்.

ஜூவில் இருக்கும் மிருகமா?

ஜூவில் இருக்கும் மிருகமா?

தொடர்ந்து பேசிய டாப்ஸி, நான் வீட்டை விட்டு வெளியே போகும்போது ரசிகர்கள் தொடர்ந்து வந்து படம் எடுக்கின்றனர். காரின் ஜன்னலில் கேமராவை வைத்தும் வீடியோ எடுக்கிறார்கள். நடிகையாக இருந்தாலும் எனது சொந்த வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. நடிகையாக இருப்பதால் மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்றார். நான் என்ன ஜூ வில் இருக்கும் மிருகமா? அவர்களுக்கும் தனிப்பட்ட பர்சனல் இருக்கு என்று கோவமாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X