லெஜண்ட் அண்ணாச்சி ஜோடியின் ஹாட் போஸ்… திணறும் இணையம்!
சென்னை : லெஜண்ட் அண்ணாச்சியுடன் ஆட்டம் போட்டு தமிழ் ஆடியன்ஸின் மனதில் இடம் பிடித்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா இணையமே திணறும் அளவுக்கு ஒவர் கவர்ச்சி காட்டி உள்ளார்.
மாடல் அழகியான ஊர்வசி ரவுடேலா உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கோட்வாரில் பிறந்தார். சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசையால், மாடலிங் துறையை தேர்ந்து எடுத்த ஊர்வசி, 2009 ஆம் ஆண்டு மிஸ் டீன் இந்தியா போட்டியில் கலந்து கொண்டார்.
மிஸ் திவா யுனிவர்ஸ், மிஸ் டூரிஸம் குயின் இன்டர்நேஷனல் உட்பட பல அழகுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

நடிகை ஊர்வசி ரவுடேலா
மாடல் அழகியான ஊர்வசி, 2013 ஆம் ஆண்டு, சிங் சாப் தி கிரேட் படத்தின் சினிமாவில் நடித்தார். இந்த படத்தில் ஊர்வசி ரவுடேலாவின் கதாபாத்திரம் பேசப்பட்டதை அடுத்து சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் மற்றும் பகல்பந்தி போன்ற பிற பாலிவுட் படங்களில் நடித்தார். படங்கள் மட்டுமில்லாமல் , LoveDose மற்றும் Teri Load Ve உள்ளிட்ட ஆல்பத்திலும் நடித்துள்ளார்.

லெஜண்ட் அண்ணாச்சியில் ஜோடி
பாலிவுட் நடிகையாக கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து வந்த ஊர்வசி ரவுடேலா, தி லெஜண்ட் திரைப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ஆடியன்ஸ்சின் ஹாட் பீட்டை எகுறவைத்தார். இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் குறித்து கணிசமான வசூலை பெற்றது. சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நம்பர் ஒன் என்ற இடத்தையும் பிடித்தது.

காந்தாரா 2 படத்தில்
லெஜண்ட் சரவணனுடன் ஆட்டம் போட்ட ஊர்வசி ரவுடேலா காந்தாரா 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. காந்தாரா முதல் பாகத்தில், ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாக கன்னட நடிகை சப்தமி கவுடா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், காந்தாரா இரண்டாம் பாகத்தில் ஊர்வசியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஹாட் ரெட் சில்லி
இந்நிலையில், ஊர்வசி ரவுடேலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிவப்பு உடையில், ரெட் சில்லி போல செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் அவரின் மெசேஜ் பாஸ் நிரம்பும் அளவுக்கு கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர். பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவை இதுவரை, 63 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

எனக்காக காத்திருந்தார்
நடிகை ஊர்வசி ரவுடேலா, அண்மையில் அளித்த பேட்டியில், தனக்கு நிறையபேர் காதல் புரோபோஸ்கள் செய்ததாகவும், தனக்காக பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான ரிஷப் பண்ட் நீண்ட நேரம் ஓட்டலில் காத்திருந்தார் என்றும், தனக்கு நேரம் இல்லாததால் அவரைச் சந்திக்க முடியவில்லை என்று கூறி இருந்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது.


Click it and Unblock the Notifications











