கோலிவுட்டை விட்டுவிட்டு பாலிவுட்டுக்கு மட்டும் பர்த்டே பார்ட்டி கொடுத்த அசின்
மும்பை: நடிகை அசின் தனது பிறந்தநாள் அன்று பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டும் பிரமாண்டமான பார்ட்டி கொடுத்துள்ளார்.
கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலான அசின் கடந்த 26ம் தேதி தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார். வழக்கமாக தனது குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாடும் அவர் இந்த ஆண்டு பாலிவுட் பிரபலங்களுக்கு பிரமாண்ட பார்ட்டி கொடுத்து கொண்டாடினார்.
பார்ட்டியில் கோலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

அபி, ஐஸ்
அசின் பிறந்தநாள் பார்ட்டிக்கு அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயுடன் வந்திருந்தார். அபியும் அசினும் சேர்ந்து மேரே அப்னே என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்குலின்
அசின் கொடுத்த பார்ட்டிக்கு இந்தி படங்களில் நடிக்கும் இலங்கை அழகி ஜாக்குலின் பெர்னான்டஸ் வந்திருந்தார். அசினின் இந்த திடீர் பார்ட்டிக்கு பின்னால் காரணம் உள்ளது.

அசின்
பாலிவுட்டில் அசினுக்கு மவுசு இல்லை. இளம் ஹீரோக்களுடன் நடிக்கக் கேட்டால் அம்மணி முடியாது என்கிறார். அதனால் தான் இப்படி பார்ட்டி கொடுத்து வாய்ப்பு தேடுகிறாராம்.

கேக்
அசினுக்கும், இந்தி நடிகை ரவீனா டான்டனுக்கும் ஒரே பிறந்த தேதி. ரவீனாவும் அசினும் கூட்டாக சேர்ந்து பார்ட்டி கொடுப்பதாக இருந்தது. ஆனால் ரவீனா கடைசிநேரத்தில் பின்வாங்கிக் கொண்டார்.

பிரபுதேவா
கோலிவுட்டை அழைக்கவில்லை என்றீர்கள் பிரபுதேவா வந்திருக்கிறாரே என்று நினைக்கிறீர்களா?. பிரபுதேவாவும் தற்போது பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் இவரது படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். அதனால் அழைக்கப்பட்டிருக்கலாம்.

ரசூல் பூக்குட்டி
ஆஸ்கர் விருது பெற்ற சவுன்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி தனது மாநிலமான கேரளாவைச் சேர்ந்த அசினின் பிறந்தநாள் பார்ட்டிக்கு குடும்பத்துடன் வந்து வாழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











