For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலிவுட்டின் அட்டகாசமான பிகினி அழகி யார்?

  By Mayura Akilan
  |

  பாலிவுட் என்றாலே கலர்ஃபுல் மசாலா என்றாகி விட்டது. அதிலும் பிகினி உடை அழகிகளுக்குத்தான் அங்கு இப்பல்லாம் அதிக மவுசு. பாலிவுட்டைக் கலக்கி வரும் சில பிகினி அழகிகள் குறித்த ஒரு ரவுண்டப்..

  தீபிகா படுகோனே

  தீபிகா படுகோனே

  ஓம் ஷாந்தி ஓம் படத்தில் இருந்து கோச்சடையான் வரை தீபிகா படுகோனேவிற்கு வரவேற்பு அதிகம்தான். அதுவும் காக்டெயில் படத்தில் ஆரஞ்ச் நிற பிகினியில் தோன்றியதுதான் ஹாட்டாக பேசப்பட்டது. பிகினியில் நடிக்கவேண்டும் என்பதற்காகவே உடம்பை பிட்டாக்கினாராம் தீபிகா. பிகினி உடையில் தீபிகா தோன்றும் இந்த காட்சி கேப்டவுனில் படமாக்கப்பட்டதாம்.

  மல்லிகா ஷெராவத்

  மல்லிகா ஷெராவத்

  மல்லிகா ஷெராவத் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது.

  2003 ம் ஆண்டு பாலிவுட் திரை உலகில் காலடி எடுத்துவைத்த இந்த கவர்ச்சிக் கிளி தசாவதாரம் மூலம் தமிழுக்கு வந்தது.

  ‘டபுள் தாமல்' படத்திற்காக வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் மல்லிகா குளிப்பது போல படமாக்கினார்கள். முதல் காட்சியிலேயே பிகினி டிரெஸ்சில் படு கவர்ச்சியாக நடித்தார் மல்லிகா. ‘பிகினி டிரெஸ் சில பேருக்கு மட்டும்தான் சரியாக பொருந்தும். குறிப்பாக மல்லிகாவுக்கு அந்த உடை அற்புதமாக இருந்தது என்றாராம் படத்தயாரிப்பாளர்.

  பிபாஷா பாஷூ

  பிபாஷா பாஷூ

  பிப்ஸ் என்று செல்லமாக அழைப்படும் பிபாஷாபாஷூ பாலிவுட் உலகின் கவர்ச்சிக் கன்னி. விளம்பர உலகில் வாழ்க்கையை துவக்கிய அவரை பாலிவுட் உலகம் அரவணைத்தது. 2001 ல் அஜ்னாபி என்ற படத்தில் நடிக்கத் தொடங்கிய அவர் தன்னுடைய கவர்ச்சியான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர். ராஷ் 3 யில் இவர் நடித்த நீண்ட முத்தக்காட்சி பிரபலமானது. இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் கைவசம் ரேஸ் 2, ஆத்மா, நோ என்ட்ரி மெயின் என்ட்ரி படங்களை அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

  அமீஷா படேல்

  அமீஷா படேல்

  அமீஷா படேல் ‘தோடா பியார் தோடா மேஜிக்' படத்தில் அதிகமாக கவர்ச்சி காட்டியவர். அதில் மஞ்சள் கலர் டூ பீஸ் பிகினியில் கலக்கினார் அமீஷா படேல். பாலிவுட்டில் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள ரேஸ் 2 படத்தில் கலக்கல் கறுப்பு பிகினியில் தோன்றினார்.

  அனுஷ்கா ஷர்மா

  அனுஷ்கா ஷர்மா

  விளம்பர மாடலான அனுஷ்கா ஷர்மா, 2008 ம் ஆண்டு ஆதித்யா சோப்ராவின் படங்களில் நடிக்க ஓப்பந்தமானார். இதுவரை 9 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் ஹாட்டாக இடம் பிடித்திருக்கிறார். லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால் படத்தில் பிகினியாக நடித்து தனக்கும் பிகினி உடை சூட்டாகும் என்று நிரூபித்தார் அனுஷ்கா சர்மா.

  ஷெர்லின் சோப்ரா

  ஷெர்லின் சோப்ரா

  பிரபல மாடல், பாலிவுட் நடிகை என்ற பிரபலத்துடன் வலம் வரும் ஷெர்லின் சோப்ரா கவர்ச்சியில் கலக்குபவர். ஷெர்லின் சோப்ராவை சாதாரண உடையில் பார்க்கவே முடியாது. அப்படி ஒரு கிளாமர் பிரியை. கவர்ச்சிகரமாக இருப்பதை மட்டும் விரும்புபவர்.

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார். பிகினி என்றால் அப்படி ஒரு பிரியம். டிவி நாடகங்களில் கூட பிகினி உடையில் வர அனுமதிக்க வேண்டும் என்று பேட்டி கொடுத்து அதிரவைத்தவர் ஷெர்லின் சோப்ரா.

  ராக்கி ஷாவந்த்

  ராக்கி ஷாவந்த்

  ராக்கி ஷாவந்த் பிரபல இந்தி திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என புகழ் வெளிச்சத்தில் இருக்கிறார். 1997 ல் அக்னி சக்ரா என்ற இந்திப்படத்தில் நடித்தார். பிக் பாஸ் சீசன் 1 ல் போட்டியாளராக தொலைக்காட்சிக்குள் நுழைந்தார். பின்னர் இவர் நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சி புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

  பூனம் பாண்டே

  பூனம் பாண்டே

  தன்னுடைய உடல் அழகின் மீதும் கவர்ச்சியின் மீதும் எக்கச்சக்க தன்னம்பிக்கை கொண்டவர். இணையதளங்கள் சூடாவதே இவர் வெளியிடும் சூடான படங்களினால்தான். அந்த அளவிற்கு தன்னுடைய பிகினி படங்களை வெளியிட்டு ரேட்டிங்கை அதிகரிப்பார் பூனம்பாண்டே. உலகக்கோப்பையை இந்தியா ஜெயித்தால் நிர்வாண போஸ் தருவேன் என்றெல்லாம் கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்தார்.

  சன்னி லியோன்

  சன்னி லியோன்

  போர்ன் படங்களில் நடித்து பிரபலமடைந்த கனடாவைச் சேர்ந்த நடிகை சன்னி லியோன் பிக் பாஸ் சீசன் 5 ல் பாலிவுட் தொலைக்காட்சி உலகிற்குள் நுழைந்தார். அங்கு வந்த மகேஷ் பட் உடனான அறிமுகம் அவருக்கு ஜிஸ்ம் 2 படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க உதவியாக அமைந்தது.

  English summary
  Bollywood has always been thirsty for beautiful actresses in bikini, here we present a collection of photos of Bollywood girls in bikini over the years, a true treat for your eyes. Go on, enjoy …
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X