பாலிவுட் எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை: ஹன்சிகா
சென்னை: இந்தி படங்களில் நடிப்பது தனக்கு முக்கியம் இல்லை என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் கை நிறைய படங்கள் வைத்து ஓடி, ஓடி உழைத்து வருகிறார் ஹன்சிகா. இது தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே உடல் எடையை வேறு குறைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தனது திரை உலக பயணம் பற்றி ஹன்சிகா கூறுகையில்,

படங்கள்
என் கையில் மொத்தம் 8 தமிழ் படங்கள் உள்ளன. மேலும் தமிழில் என்னை தேடி பல நல்ல கதைகள் வருகின்றன.

தெலுங்கு
எனக்கு தமிழ் திரை உலகில் நல்ல இடம் கிடைத்துள்ளது. அதே சமயம் நல்ல கதை கிடைத்தால் தெலுங்கு படங்களிலும் நடிப்பேன்.

பாலிவுட்
தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பது வசதியாக உள்ளது. இந்தி படங்களில் நடிக்கும் ஆசை எனக்கு இல்லை.

இந்தி
எனக்கு இந்தி படங்கள் முக்கியம் இல்லை. பாலிவுட்டில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவற்றை நான் தான் ஏற்கவில்லை என்றார் ஹன்சிகா.

வித்தியாசமாக பொண்ணு தான்
கோலிவுட், டோலிவுட் நடிகைகளுக்கு பாலிவுட் செல்லும் கனவும் ஆசையும் உள்ளது. இதற்கிடையே ஹன்சிகா வித்தியாசமானவராக உள்ளாரே. பிழைக்கத் தெரிந்த பொண்ணு தான்.


Click it and Unblock the Notifications











