இன்ஸ்டாவை தெறிக்கவிடும் சூப்பர் லேடி.. வெயிட்டா வருது பாகி 3.. ஹேப்பி பர்த்டே ஷ்ரத்தா கபூர்!

மும்பை: பாலிவுட்டின் சூப்பர் லேடி ஷ்ரத்தா கபூரின் 33வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Shocking! Iran Model look alike Aiswarya Rai | Shraddha Kapoor B'Day | Katrina funny Tweet

பாகி 3 படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகை ஷ்ரத்தா கபூர், தனது பிறந்த நாளை படக்குழுவுடன் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

ஷ்ரத்தா கபூரின் பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.

வாரிசு நடிகை

பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வரும் பலரும், வாரிசு நடிகைகள் தான். பிரபல வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் தான் ஷ்ரத்தா. 1987ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி மும்பையில், பிறந்த ஷ்ரத்தா கபூர், 2010ம் ஆண்டு வெளியான டீன் பட்டி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

கவனம் ஈர்த்த

2013ம் ஆண்டு வெளியான ஆஷிக் 2 படத்தின் மூலம், ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஷ்ரத்தா கபூர் ஈர்த்தார். யாருடா இந்த பொண்ணு என்னம்மா நடிக்கிறா என பாலிவுட்டை தாண்டி கோலிவுட் ரசிகர்களும், ஆஷிக் 2 படத்தை தியேட்டர்களில் பார்த்து வியந்தனர்.

நல்ல டான்ஸர்

ஆஷிக் 2 படத்தில் பாடகியாக நடித்து அசத்திய ஷ்ரத்தா கபூர், ஏபிசிடி, ஏபிசிடி 2 மற்றும் ஸ்ட்ரீட் டான்சர் உள்ளிட்ட படங்களில், வருண் தவான் மற்றும் பிரபுதேவாவுடன் இணைந்து முழுக்க முழுக்க டான்ஸ் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்து, தனது நடன திறமையால், இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.

ஆக்‌ஷன் அவதாரம்

ஏபிசிடி சீரிஸ் படங்களை போலவே, டைகர் ஷெராஃப் உடன் இவர் நடித்த பாகி மற்றும் பாகி 2 படங்கள் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தன. பாட்டு, டான்ஸ் என கலக்கி வந்த நடிகை ஷ்ரத்தா கபூர், பாகி படங்களின் மூலம் ஆக்‌ஷன் அவதாரத்தையும் எடுத்து அசத்தி வருகிறார்.

பிரபாஸ் உடன்

பாகுபலி படங்களின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடிப்பில், 300 கோடி பட்ஜெட்டில் உருவான சாஹோ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக லவ், ஆக்‌ஷன், கிளாமர் என அனைத்து தரப்பிலும் நடிகை ஷ்ரத்தா கபூர் புகுந்து விளையாடி இருப்பார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இன்ஸ்டா பேபி

தனது செம்ம ஹாட்டான புகைப்படங்களை அவ்வப்போது, இன்ஸ்டாவில் பதிவிட்டு வரும் ஷ்ரத்தா கபூருக்கு, இன்ஸ்டாகிராமில் உலகளவில் 41.2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். ஷ்ரத்தா கபூரின் ஒவ்வொரு இன்ஸ்டா பதிவுக்கும் மில்லியன் கணக்கில் லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

மார்ச் 6

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், அகமது கான் இயக்கத்தில், டைகர் ஷெராஃப், ஷ்ரத்தா கபூர், ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் உருவாகி உள்ள பாகி 3 படம் வரும் மார்ச் 6ம் தேதி திரைக்கு வருகிறது. இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் ஷ்ரத்தா கபூர், வரும் 6ம் தேதி, ரசிகர்களுக்கு வெயிட்டான பிறந்த நாள் ட்ரீட் தர உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X