கரீனா கபூரின் கர்ப்பகால புத்தகம்… கிறிஸ்தவர்களின் மத உணர்வை கொச்சைப்படுத்துவதாக புகார் !

மும்பை : பாலிவுட் நடிகை கரீனா கபூர் கர்ப்ப கால அனுபவம் குறித்து புத்தகம் ஒன்று எழுதி உள்ளார். அது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அந்த புத்தகத்தின் தலைப்பு இருப்பதாக கிறிஸ்துவ அமைப்புகள் அந்த புத்தகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன.

மேலும், இப்புத்தகத்தை வெளியிட்ட நிறுவனத்தின் மீதும் கரீனா கபூர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வெற்றிப்படங்கள்

வெற்றிப்படங்கள்

முன்னணி நடிகையாக வலம் வரும் கரீனா கபூர், ஷாருக்கான், அக்ஷய் குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கவர்ச்சியில் தாராளம் காட்டும் இவருக்கு எல்லைத்தாண்டியும் ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.

சைஃப் அலிகான்

சைஃப் அலிகான்

இந்நிலையில் நடிகர் சைஃப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கரீனா கபூர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்கு தைமூர் அலிகான் என பெயர் வைத்துள்ளனர்.

2வது ஆண் குழந்தை

2வது ஆண் குழந்தை

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு இரண்டாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக சைஃப் அலி கான் புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். 2வது பிரசவத்திற்கு பிறகு படப்பிடிப்பு வேலையில் ஈடுபடாமல் இருந்த கரீனா மீண்டும் பணிகளை தொடங்கி உள்ளார்.

பிரக்னன்ஸி பைபிள்

இந்நிலையில், நடிகை கரீனா கபூர், தனது கர்ப்ப கால அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இப்புத்தகத்திற்கு பிரக்னன்ஸி பைபிள் என்று பெயர் வைத்துள்ளார். இந்த பெயருக்கு சில கிருஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பைபிள் என்ற வாசகத்தை மாற்ற வேண்டும் என்று போர் கொடி தூக்கி உள்ளனர். மேலும் புத்தகத்தை வெளியிட்ட நிறுவனத்தின் மீதும் கரீனா மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X