புடவையில் கலக்கும் பாலிவுட் மயில்கள்…

By Mayura Akilan

தமிழ்நாட்டு ஹீரோயின்களை புடவையில் பார்ப்பது சாதாரணமான விசயம். ஆனால் பாலிவுட் உலகில் ஹீரோயின்கள் சினிமாவில் மட்டுமல்லாது விழாக்களிலும் புடவை கட்டி வந்து அசத்துகின்றனர்.

சென்னை எக்ஸ் பிரஸ் படத்தில் தீபிகா படுகோனே புடவையில் கூடுதல் அழகு காட்டியிருப்பார்.

உலகின் கவர்ச்சிகரமான பெண்ணாக தேர்வாகியிருக்கும் கத்ரீனா தொடங்கி உலக அழகி ஐஸ்வர்யா ராய் வரை புடவைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை.

யாருக்கு என்ன புடவை பிடிக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

இளம் சந்தனக்கலர் புடவை தீபிகாவிற்கு ரொம்ப பிடித்தமானதாம். அதுவும் அஸ்ஸாம் சில்க் புடவைகள் ஆள் டைம் பேவரைட் என்கிறார்.

கத்ரீனா கைப்

கத்ரீனா கைப்

தங்கநூல் கொண்டு நெய்யப்பட்ட மான பைத்தானி புடவைகள்தான் கத்ரீனாவின் பேவரைட்டாம். விழாக்களில் அந்த புடவைகளை கட்டிக்கொண்டு வரத்தான் விரும்புவாராம் கத்ரீனா.

சோனம்கபூர்

சோனம்கபூர்

சுடிதாரோ, புடவையோ பாந்தமாக இருக்கும் சோனம் கபூருக்கு. அவர் விரும்புவது போச்சம்பள்ளி காட்டன் புடவைகளைத்தானாம். அதன் நிறங்கள் தனது மனதை கொள்ளை கொண்டவை என்கிறார் சோனம்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

மத்திய பிரதேச மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் சந்தேரி புடவைகள் வித்யா பாலனின் பேவரைட் புடவைகளாம். அழகான கலைநயத்துடன் கூடிய அந்த புடவைகள் வித்யாவிற்கு கூடுதல் அழகைத் தருமாம்.

கரீனாவின் புடவை

கரீனாவின் புடவை

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தயாரிக்கப்படும் பிரபலமான டாக்காய் புடவைகள்தான் கரீனாவின் பேவரைட்டாம்.

ஐஸ்வர்யாவின் பனாரஸ்

ஐஸ்வர்யாவின் பனாரஸ்

உலக அழகி ஐஸ்வர்யாவின் பேவரைட் பனாரஸ் பட்டுப்புடவைகளாம். நிறமும், தங்க நிற எம்ராய்டரியும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் என்கிறார் ஐஸ்வர்யா.

பிபாசா பாசு

பிபாசா பாசு

கவர்ச்சிப்புயல் பிபாசா பாசுவிற்கு ரொம்ப பிடித்த புடவை சாம்பல்புரி காட்டன் பட்டுப் புடவைதானாம். ஒடிஸா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த புடவைகள் சிறுசிறு எம்ராய்டரியில் அசத்தலாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X