»   »  அஜீத் உடன் ஜோடி சேர ஆசைப்படும் பாலிவுட் நாயகிகள்

அஜீத் உடன் ஜோடி சேர ஆசைப்படும் பாலிவுட் நாயகிகள்

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

தல அஜீத் உடன் ஜோடியாக நடிக்க பாலிவுட் நாயகிகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோரிடையே போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்திற்குத்தான் இந்த போட்டியாம். கவுதமின் ஆஸ்தான நாயகிகளான திரிஷா, ஷமீரா ரெட்டி, சமந்தா ஆகியோரை ஒதுக்கிவிட்டு யாரை அஜீத் ஜோடியாக்குவார் என்பது பற்றி இப்போதே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

துருவ நட்சத்திரம் படத்திற்கு நாயகி யார் என்பதுதான் பிரதானமாக பேசப்பட்டது. திரிஷா, அசின், சமந்தா என்று பேசப்பட்டு பின்னர் படம் டிராப் ஆனாது. அதுபோல இல்லாமல் அஜீத் படத்திற்காவது உடனடியாக கதாநாயகி யார் என்பதை கவுதம்மேனன் அறிவிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆரம்பம் நயன்தாரா

ஆரம்பம் நயன்தாரா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஆரம்பம் படம், தீபாவளிக்கு வெளியாகிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

வீரம் தமன்னா

வீரம் தமன்னா

இதையடுத்து வீரம் படத்தில் அஜித் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் அஜீத் ஜோடி தமன்னா

அஜீத் - கவுதம் மேனன்

அஜீத் - கவுதம் மேனன்

வீரம் படத்திற்கு அஜித் - கெளதம் மேனன் இணையும் படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தினையும் 'ஆரம்பம்' படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.

தீபிகா படுகோனே-பிரியங்கா சோப்ரா

தீபிகா படுகோனே-பிரியங்கா சோப்ரா

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனே, மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ரஜினி நாயகி

ரஜினி நாயகி

தீபிகா படுகோனே ஏற்கனவே கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு நாயகியாக நடித்துள்ளார். கோலிவுட்டில் ரஜினிக்கு அடுத்தபடியாக அஜீத்துக்குத்தான் அதிக ரசிகர்கள் இருப்பதால் இந்த வாய்ப்பை பெறுவதற்கு தீபிகாவும், பிரியங்காவும் போட்டி போடுகின்றனர்.

நஸ்ரியாவும்

நஸ்ரியாவும்

இன்னொரு ஹீரோயினியாக நஸ்ரியா நடிக்கிறார். நகரத்தில் நடைபெறும் த்ரில்லர் வகை கதையாம். வித்தியாசமான கெட்டப்பில் அஜித் தோன்றுவார் என்று அறிவித்திருக்கிறார்கள். மிகப்பிரமாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2014 முதல் துவங்கவிருக்கிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Bollywood heroines like Deepika Padukone, Priyanka Chopra and others are trying too much to pair with Ajith.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more