'உங்க பிரேக் அப் ஸ்டோரி சொல்லுங்களேன்..' பிரபல பிகினி நடிகையிடம் பிரியமாகக் கேட்கும் ரசிகாஸ்!
மும்பை: பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல நடிகையிடம் அவரது பிரேக் அப் ஸ்டோரி கேட்டுள்ளனர் ரசிகர்கள்.
இந்தியில் வெளியான, சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி (Sonu ke titu ki Sweety) என்ற படத்தில் போம் டிக்கி டிக்கி என்ற பாடலுக்கு ஆடியதன் மூலம் பிரபலமானவர் சாக்ஷி மாலிக்.
இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, ஒரே நாளில், அவரது இன்ஸ்டாகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை கன்னா பின்னாவென்று அதிகரித்தது.

வீட்டை விட்டு
பிரபல மாடலான இவர், சில படங்களில் நடித்துள்ளார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற நடிகைகளை போல வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கிறார் சாக்ஷி மாலிக்.

இன்ஸ்டாகிராம்
வீட்டில் இருந்தபடியே, தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு வருவதை நடிகைகள் வழக்கமாக வைத்துள்ளனர். அதற்கு சாக்ஷி மாலிக்கும் விதிவிலக்கல்ல, அவரும் அதையே செய்துவருகிறார். இதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை குவிக்கின்றனர். பல ரசிகர்கள் ஜாலி, கேலி கமென்ட்களையும் பதிவிடுகின்றனர்.

பிகினி புகைப்படம்
நடிகை சாக்ஷி மாலிக் இப்போது பிகினி டிரெஸ் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே இரண்டரை லட்சம் லைக்ஸ்களை அள்ளி இருக்கிறது இந்த வெள்ளை பிகினி போட்டோ. இதற்கு, 'அவள் ஒரு ராணி, அவளது ஆன்மாதான் ராயல்டி' என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார், சாக்ஷி மாலிக்.

பஞ்சமில்லை
இந்த போட்டோவுக்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமான கமென்ட்கள் குவிந்துள்ளன. இந்த கேப்ஷனுக்கு என்னங்க அர்த்தம் என்று சில ரசிகர்கள் கேட்டுள்ளனர். பலர், அவரது அழகை, அப்படி இப்படியாக வர்ணித்துள்ளனர். ரசிகர்களின், ஐ லவ் யூ, உங்களை போல அழகி உலகத்திலேயே இல்லை, எனக்கு ஒரே ஒரு பதில் போடமாட்டீங்களா?, ஹாட், ஆசம் என்பது போன்ற கமென்ட்களுக்கும் பஞ்சமில்லை.

டிரை பண்ணக்கூடாது
'உங்க காலுக்கு பக்கத்துல என்னமோ இருக்கே, அது என்ன? என்று ஒரு நெட்டிசன் குறிப்பிட்டுக் கேட்டுள்ளார். இன்னொருவர், பிகினி உங்களுக்கு மட்டும் அவ்வளவு அம்சமா பொருந்துதே, எப்படி என்று தெரிவித்துள்ளார். ஒருவர், டிசைன் டிசைனா பிகினி இருக்கே, நீங்க ஏன் வேற மாதிரி பிகினி டிரை பண்ணக் கூடாது? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

பிரேக் அப் ஸ்டோரி
இது குவாரன்டைன் லைஃபா, பிகினி லைஃபா? என்று ஒருவர் கேட்க, வேறொரு ரசிகர், உங்க பிரேக் அப் ஸ்டோரிய சொல்லுங்களேன், மத்தவங்களுக்கு பயன்படற மாதிரி இருக்கும் என்று கேட்டுள்ளார். சிலர் இப்படியொரு டிரெஸ்ச போட்டு போட்டோ எடுக்கறீங்களே, வெட்கமா இல்லையா? என்று கேட்டுள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











