Trisha: த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாயுடன் காவல்துறை நடத்திய சோதனை

சென்னை: நடிகை த்ரிஷா வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மிரட்டலை அடுத்து காவல்துறையினர் மோப்ப நாயுடன் நடிகை த்ரிஷா வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் அது புரளி எனத் தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் வெடி குண்டு மிரட்டல் வந்தது. அதை அடுத்து அவர்கள் வீட்டிலும் மோப்ப நாயுடன் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

Bomb Threat at Trisha Krishnan s Chennai Residence Turns Out to Be Hoax Police Conduct Search

நடிகை த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் இருக்கும் மிகவும் முக்கியமான முன்னணி நடிகைகளில் ஒருவர். 23 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறந்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம், கருப்பு. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி உள்ளார். இந்த படம் மே மாதம் வெளியாகவுள்ளது.

நடிகை த்ரிஷா குறித்த தகவல்கள் வாரத்திற்கு ஒன்று என்று ஏதாவது வந்த வண்ணமே உள்ளது. அதிலும் குறிப்பாக அவரது திருமணம், காதல் என ஏகப்பட்ட கட்டுக் கதைகள் இணையத்தில் பலராலும் பகிரப்படுகிறது. முகம் தெரியாத இணையவசிகள் தான் இது போல செய்கிறார்கள் என்று பார்த்தால், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகர் விஜய் உடன் தொடர்பு படுத்தி பேசினார். ஆனால் இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷா மிகவும் கண்ணியமாக கையாண்டது பலராலும் பாராட்டுக்களைப் பெற்றது. அதேநேரத்தில் நயினார் நாகேந்திரன் மன்னிப்பும் கேட்டுவிட்டார்.

விஜய்: நடிகர் விஜய்யின் விவாகரத்து விவகாரம் தொடர்பான தகவல்கள் வெளியான ஒரு வாரத்திற்குள் நடிகர் விஜய் உடன் இவர் திருமணத்திற்கு சென்றது பெரும் பேசு பொருளாக மாறியது. இது தொடர்பாக பலரும் பல கருத்துகள் தெரிவித்த நிலையில், நடிகர் பார்த்திபனுடன் மட்டும் சண்டை செய்து கொண்டு இருந்தார். மேலும் சிலர் இணையத்தில் நடிகர் விஜய் விவாகரத்து முடிந்தவுடன் த்ரிஷாவுடன் திருமணம் நடைபெறவுள்ளது என்று எல்லாம் ஆதாரமே இல்லாமல் பதிவிட்டனர். இப்படி இருக்கையில் நடிகை த்ரிஷா இணையவாசிகளுக்கு பதில் அளித்துக் கொண்டு இருந்தால், நிம்மதி கெட்டுவிடும் என்று தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X