வாவ்.. மெர்சலா இருக்கு செல்லம்.. பிரியா பவானி சங்கரை பார்த்து கிறங்கி போன பேன்ஸ்!

சென்னை : நடிகை பவானி ஷங்கர் மஞ்சள் நிற வெல்வெட் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தொடர்ந்து விஜய் டிவி சீரியலில் நடித்து பிரபலமானார்.

Bommai heroine priya bhavani shankar glamour photoshoot

பிரியா பவானி சங்கர் : கல்யாண முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்து மிக பிரபலமான இவர், தமிழில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் மதுமிதா எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி சினிமாவில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம் இயக்குனர் SJ.சூர்யா கதாநாயகனாக நடித்த மான்ஸ்டர், ஹரிஷ் கல்யாணின் ஓ மண பெண்ணே என பல நடிததுர் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அடுத்தடுத்த படங்களில் : கடந்த ஆண்டு இவர் நடிப்பில் ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அகிலன் படத்திலும், ருத்ரன், பத்து தல என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். மேலும், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.

Bommai heroine priya bhavani shankar glamour photoshoot

கனிவான நடிகை : தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கும் பிரியா, தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருக்கிறார். சம்பள விஷயத்தில் பேரம் பேசாமல், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவதும் பிரியா பாவனி ஷங்கர் ஏராளமான படங்களில் ஒப்பந்தமாக ஒரு காரணம்.

விதவிதமான போட்டோஸ் : அதே போல பில்லியன் டாலர் ரூபாய் கொடுத்தாலும் கிளாமர் போட்டோ ஷூட் செய்ய மாட்டேன் என தனக்கென தனி கொள்கை வைத்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியில் எல்லை மீறாமல் விதவிதமான புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற வெல்வெட் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Bommai heroine priya bhavani shankar glamour photoshoot

பொம்மை : நடிகை பிரியா பவானி சங்கர் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 'மான்ஸ்டர்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் பணிகள் கொரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்ந்தது. தற்போது இப்படம் ஜூன் 19ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X