ஸ்ரீதேவி பிறந்தநாள்.. 35 வருடங்களுக்கு முன்பு மேடையில் போனிகபூர் என்ன செய்தார் தெரியுமா?.. செம சுவாரஸ்யம்
சென்னை: இந்திய திரையுலகில் முடிசூடா ராணியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கும் அவர் தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு துபாயில் இருக்கும் ஒரு ஹோட்டலில் உயிரிழந்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கு இன்று 62ஆவது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை போனி பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோருடன் நடித்த ஸ்ரீதேவி பிறகு ஹீரோயினாக அறிமுகமானார். அழகு, திறமை, கவர்ச்சி அத்தனையும் அவருக்கு இருந்ததால் ஹீரோயினாக இன்ட்ரோ ஆன சில காலத்திலேயே முன்னணி நாயகி என்ற இடத்தை அடைந்தார். ரஜினி, கமல் என 80ஸ்களின் டாப் ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்த அவருக்கு பாலிவுட் கதவுகளும் திறந்தன.
பாலிவுட்டில் சாம்ராஜ்ஜியம்: தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று வெல்வது கொஞ்சம் சிரமம்தான். அதனை அனாயசமாக செய்து காட்டினார் ஸ்ரீதேவி. அவரது கால்ஷீட்டுக்காக ஒட்டுமொத்த ஹிந்தி திரையுலகமும் காத்திருந்தது. வரிசையாக அங்கு படங்கள் நடித்து அங்கும் தனக்கான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். ஒருகட்டத்தில் பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி கோலிவுட்டை மறந்தேபோனார்.
போனிகபூருடன் திருமணம்: அங்கே பிஸியாக இருந்தபோதுதான் தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். போனிகபூருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. அப்படிப்பட்டவரை ஸ்ரீதேவி திருமணம் செய்தது அப்போதைக்கு பெரிய பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. அந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள். அவர்களும் தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துவருகிறார்கள்.

உயிரிழந்த ஸ்ரீதேவி: தமிழில் அவர் கடைசியாக புலி படத்தில் நடித்தார். அதற்கு பிறகு எதிலும் நடிக்காத அவர் கடந்த 2017ஆம் ஆண்டு துபாய்க்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள; தன் குடும்பத்தோடு சென்றார். அங்கிருக்கும் நட்சத்திர விடுதி ஒன்றில் அவர் உயிரழக்கவும் செய்தார். ஸ்ரீதேவியின் உயிரிழப்பு பலருக்கு சோகத்தையும், எப்படி இறந்தார் என்ற கேள்வியையும் எழுப்பியது. முக்கியமாக அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சர்ச்சைகள் கிளம்பின. ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கணவர் விளக்கமளித்தார்.
ஸ்ரீதேவியின் பிறந்தநாள்: மேலும் அவர்து வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்க அனுமதிக்கமாட்டேன் என போனி தெளிவுப்படுத்திவிட்டார். இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு இன்று 62வது பிறந்தநாள் ஆகும். அதனையொட்டி அவரது கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "1990ஆம் ஆண்டு ஸ்ரீதேவியின் பிறந்தநாள் விழா சென்னையில் நடந்தது. அவருக்கு அது 27ஆவது பிறந்தநாள். நான் அவரிடம் 26ஆவது பிறந்தநாள் வாழ்த்து என்று சொன்னேன்.
அப்படி நினைத்துவிட்டார்: அவர் வருடா வருடம் இளமையாகிறார் என்பதை உணர்த்துவதற்கே ஒரு வயதை குறைத்து 26ஆவது பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன். ஆனால் அவரோ நான் கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டர்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் இன்னொரு போஸ்ட்டில் ஸ்ரீதேவியின் புகைப்படத்தை பகிர்ந்து உனக்கு 62வது பிறந்தநாள் இல்லை. 26வது பிறந்தநாள்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











