பிகினி போட்டா என்ன தப்பு? பாட்டல் ராதா பட நடிகை சஞ்சனா நடராஜன் நச் பதில்!
சென்னை: சர்பட்டா பரம்பரை, ஜிகர்தண்டா டபுள் x போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சஞ்சனா நடராஜன். தற்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பாட்டல் ராதா என்ற படத்தில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நீச்சல் குளத்தில் பிகினியில் எடுத்துக் கொண்ட போட்டோவை ஷேர் செய்திருந்தார். அந்த போட்டோ விமர்சனத்திற்குள்ளான நிலையில், பிகினி போட்டா என்ன தப்பு அது என்னுடைய விருப்பம் என பேசி உள்ளார்.
நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சஞ்சனா நடராஜன், அந்த படத்தை தொடர்ந்து, இறுதிச்சுற்று, நோட்டா, கேம் ஓவர், ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என அடுத்தடுத்து படத்தில் நடித்து வருகிறார். தற்போது, இவர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவான பாட்டல் ராதா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பாட்டல் ராதா திரைப்படம்: பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில்,குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி, பரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி. குமார், கே.எஸ். கருணா பிரசாத், மாலதி அசோக் நவின், சுஹாசினி சஞ்சீவ், சிரஞ்சீவி, ஓவியர் சௌ. செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், ஆகியோர் நடித்துள்ளனர். குடியை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 20ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளி வருகிறது.

பிகினியில் என்ன தப்பு: இப்படத்தில் சஞ்சனா நடராஜன், குரு சோமசுந்தரத்தின் மனைவி அஞ்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர், நான் சோஷியல் மீடியாவில் பிகினி உடையில் எடுத்த போட்டோக்களை பதிவு செய்கிறேன் என்றால். அதில், எனக்கு எந்தவித தவறாகவும் தெரியவில்லை. எனக்கு அது சரியாகத்தான் படுகிறது. பிகினி போட்டோவை நான் இணையத்தில் பதிவிடுகிறேன் என்றால், அதனால் எந்த விதமான கருத்துக்கள் வரும், அது சரியாக இருக்குமா? என்பதை நான் யோசித்து தான் அந்த போட்டோவை அப்லோட் செய்கிறேன். எனக்கு எது சரியாக படுகிறதோ அதை நான் செய்வேன். அது என்ன வேண்டுமானாலும் இருக்கலாம், அது ஒரு காஸ்மெட்டிக் சர்ஜரியாக கூட இருக்கலாம். எனக்கு அது சரி என்று பட்டால் அதை நான் செய்வேன். இது குறித்து மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி எல்லாம் நான் யோசிக்க மாட்டேன் என பளீச் என்று பதில் அளித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











