கவர்ச்சி நடிகை புவனேஸ்வரியை ஞாபகம் இருக்கா?.. இப்போ என்ன மனநிலையில் இருக்காரு தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் புவனேஸ்வரி. அவருக்கு பாய்ஸ் திரைப்படம்தான் பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. சில நிமிடங்கள் மட்டுமே அவர் அப்படத்தில் நடித்திருந்தாலும் கிளாமர் காரணமாக பலராலும் அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட திரைத்துறையிலும் நடித்த அவர் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன்பு ஒரு சர்ச்சையிலும் சிக்கினார். அந்த பிரச்னை தொடர்பான கூட்டத்தில் பேசியபோதுதான் நடிகர் சூர்யாவும் பத்திரிகை ஒன்றை தரக்குறைவாக பேசியதாக ஒரு சர்ச்சையை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் புவனேஸ்வரி. அவருக்கு நடிக்கும் ஆர்வம் இருந்ததன் காரணமாக திரைத்துறையில் கோலோச்சிட முடிவு செய்தார். அதன்படி அவருக்கு முதலில் சின்னத்திரையில் வாய்ப்புகள் கிடைத்தன.கோகுலம் வீடு என்கிற சீரியலில் நடித்த அவர் அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியலில் நடித்தார். அதுமட்டுமின்றி சொர்க்கம், ராஜ ராஜேஸ்வரி என்கிற சீரியல்களிலும் நடித்த அவருக்கு; தமிழ் சினிமாவில் வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி முதன்முறையாக 2000ஆம் ஆண்டு வெளியான கந்தா கடம்பா கதிர்வேலா படத்தில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு ப்ரியமானவளே, பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட படங்களில் நடித்து ஓரளவுக்கு வெளிச்சத்தை பெற்றார்.

பாய்ஸில் பெரும் வெளிச்சம்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் அவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடித்தார். அதில் சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன், ஜெனிலியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடும் விமர்சனத்தை இந்தப் படம் சந்தித்தது. ஆனால் இந்தப் படத்துக்கு பிறகுதான் அவருக்கு பெரிதாக வெளிச்சம் கிடைத்தது. அதாவது அந்தப் படத்தில் அவர் சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் கவர்ச்சி ரோலை ஏற்றிருந்தார். அது பயங்கரமாக ஆடியன்ஸிடம் ஒர்க் அவுட் ஆனது. அதனையடுத்து தொடர்ந்து கிளாமர் ரோல்களாக அவருக்கு வர ஆரம்பித்தன. அவரும் அந்த ரோல்களை ஏற்று நடித்துக்கொண்டிருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் அதே மாதிரியான கேரக்டர்களை அவர் ஏற்க ஆரம்பித்தார்.

சர்ச்சையில் சிக்கிய புவனேஸ்வரி: ஆனால் ஒருகட்டத்துக்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. நிலைமை இப்படி இருக்க கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு சர்ச்சையில் சிக்கினார். அதாவது அவர் விபசாரம் செய்வதாக பிரச்னை எழுந்தது. அவர் மட்டுமின்றி நடிகைகள் சீதா, நளினி உள்ளிட்ட சீனியர் நடிகைகளின் பெயர்களும் அந்தப் பிரச்னையில் அடிபட்டன என்பது நினைவுகூரத்தக்கது. அந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரிய புயலை கிளப்பியது. அப்படி செய்தி போட்ட பத்திரிகையை கண்டித்து திரைத்துறை சார்பில் கூட்டமும் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் சூர்யாகூட ஒரு குறிப்பிட்ட பத்திரிகையையும், பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Boys Movie Actress Bhuvaneswari Recent Interview Gone Trending

ஆன்மீக வழியில் புவவேஸ்வரி: அந்த சர்ச்சைக்கு பிறகு திரையிலிருந்து படிப்படியாக ஒதுங்க ஆரம்பித்த அவர் சில வருடங்களுக்கு முன்பு சீரியல்களில் மட்டும் நடித்தார். இப்போது சீரியல்களிலும் புவனேஸ்வரியை பார்க்க முடிவதில்லை. ஒட்டுமொத்தமாகவே வெள்ளித்திரை, சின்னத்திரையிலிருந்து விலகிவிட்டார் அவர். அவர் லைம் லைட்டிலிருந்து விலகினாலும் மீண்டும் இப்போது பலராலும் கவனிக்கப்படுபவராக மாறியிருக்கிறார். ஏனெனில் அவர் முழுவதுமாக ஆன்மீக வழியில் இப்போது பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய ஆன்மீக் பயணம் குறித்து அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

புவனேஸ்வரி பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "என்னை ரசிகர்கள் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் பார்த்திருப்பார்கள். நான் இப்போது இருப்பது ஆன்மீக பாதையில். நான் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆன்மீகத்தில்தான் இருந்தேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நைத்தேன். இப்போது நான் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தங்கியிருக்கிறேன். நான் இந்த ஆன்மீக பாதைக்கு வந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. எதற்காக நான் ஆன்மீகத்துக்கு வந்தேன் என்று பலரும் கேட்கிறார்கள். ஒருமுறை எனது கனவில் கடவுள் காளிதேவி வந்து; ஆன்மீக பாதைக்கு வருமாறு சொல்லி என்னை அழைத்துவந்தார். நான் வந்து இத்தனை வருடங்களாகிவிட்டன கனவில் வந்த காளியை தேடிக்கொண்டிருந்தேன். எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் இருந்தேன். அப்படிப்பட்ட நிலைமையில்தான் எனது கனவில் வந்த காளியை தாராபுரத்தில் வைத்து பார்த்தேன்.

பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட ஸ்தலம்: இது பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட ஸ்தலம் ஆகும். தாராபுரத்துக்கு இதற்கு முன்னர் விராடபுரம் என்ற பெயர் இருந்தது. இங்கு வந்த பஞ்ச பாண்டவர்கள் காளியை வணங்கினார்கள். இதெல்லாம் காளி தேவியே எனது கனவில் தோன்றி சொன்ன விஷயம். அதேபோல் காளி எப்படி இங்கு வந்தார் என்பதற்கான ஒரு கதையும் இருக்கிறது. அதாவது முனிவர் அகஸ்தியர் இங்கிருக்கும் கோயிலுக்கு வந்து சிவனை வழிபட்டார். அப்போது கரையில் அமர்ந்து அவர் தியானம் செய்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் நிறைய அசுரரகள் அகஸ்திய முனிவரை தொந்தரவு செய்தார்களாம். அப்போது அகஸ்தியர் காளிதேவியை அழைத்திருக்கிறார். அதன் மூலம் இரண்டு பேருக்கும் ஆழமான நட்பும் உருவாகியிருக்கிறது.

அகஸ்தியர் பட்ட வேதனை: காளிதேவியை அகஸ்தியர் அழைத்து, 'அசுரர்கள் வந்து சிவனை வழிபடவே விடமாட்டேன் என்கிறார்கள் என காளியிடம் சொல்லி வேதனை பட்டார். அதனால் ஆத்திரமுற்ற காளி, இங்கே வந்து அசரர்களை அழித்துவிட்டு சென்றார். மேலும் அழித்த பிறகு இப்போது நான் தங்கியிருக்கும் இடத்தில்தான் காளி வந்து அமர்ந்தாராம். அன்றிலிருந்து இந்த சுற்றுவட்டார பக்தர்களுக்கு பல யுகங்களாக தரிசனம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனது கனவிலும் அதே காளி தேவிதான் வந்தார். அந்தக் காளியை நான் இத்தனை வருடங்களாக தேடிக்கொண்டிருந்த நான் தற்போது தாராபுரத்தில் கண்டுபிடித்ததால் இங்கு வந்து தங்கியிருக்கிறேன்" என்றார்.அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களோ விடால் நான்தான் காளியே என்று புவனேஸ்வரி கூறுவாரோ என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாய்ஸ் படம்தான்: அதேபோல் இதற்கு முன்னதாக அவர் கொடுத்த ஒரு பேட்டியில் தனக்கு வெளிச்சம் கொடுத்த பாய்ஸ் படத்தில் ஏற்றிருந்த ரோல் குறித்து பேசியிருந்த அவர், "என் குடும்பத்திற்கு சினிமாவில் பின்புலம் கிடையாது. சினிமாவிற்குள் நான் விருப்பப்பட்டு வரவில்லை.அந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் அது பெரிதும் பேசப்படது. அந்தக் காட்சியில் நடிக்க தயங்கி முதல் படமே இப்படி இருக்கிறதே என ஷங்கரிடம் கேட்டேன். அதற்கு அவர் படத்தில் 5 பாய்ஸுடன் நீங்கள் நடிக்கப்போகிறீர்கள். ஆனால் ஒருவரது விரல்கூட உங்கள் மேல் படாது என கூறியதால் நடிக்க சம்மதித்தேன் என்று புவனேஸ்வரி சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X