முன் பக்கம் கூந்தல் மட்டுமே.. பின் பக்கம் முழு ஓபன்..! "பிரம்மயுகம்" பெண் கேரக்டர் செய்த வேலை என்ன?

திருவனந்தபுரம்: மம்மூட்டி நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மயுகம் (Bramayugam) திரைப்படம் தான் டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருக்கிறது. இந்தியாவில் வெளியான ஹாரர் படங்களில் பிரம்மயுகம் தனி இடத்தை பிடிக்கும் என பல விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் கொடுமன் போட்டி கதாபாத்திரத்தில் நடித்து வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருக்கிறார் மம்மூட்டி. வெறும் 5 பேர் மட்டுமே கதாபாத்திரங்கள் எனும் நிலையில், அதிலும் ஒரே ஒரு நடிகை மட்டுமே இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கம்மாடிப்பாடம் படத்தில் அறிமுகமான அமல்டா லிஸ், பிரமயுகம் படத்தில் மம்முட்டியுடன், மேலாடை அணியாமல் யட்சி அதாவது நம்மூர் மோகினி பேய் மாதிரி, கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Bramayugam actress Amalda Liz bold acting without dress shocks fans

வசூலில் மிரட்டும் பிரம்மயுகம்: கடந்த பிப்ரவரி 15ம் தேதி வியாழக்கிழமை ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த், மணிகண்ட ராஜன் என 4 முக்கிய கதாபாத்திரங்களுடன் யட்சி எனும் பேய் கதாபாத்திரத்தில் அமல்டா லிஸ் நடித்திருந்தார். 5 நாட்களில் 14 கோடி ரூபாய் வசூலை அள்ளி வெற்றிநடை போடுகிறது இந்த படம். இத்தனைக்கும் வெறும் மலையாள மொழியில் மட்டுமே பிரம்மயுகம் வெளியாகி இருக்கிறது. மற்ற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகி இருந்தால் இந்நேரம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை நிகழ்த்தியிருக்கும் என்கின்றனர்.

ஆடையணியாத யட்சி: மம்மூட்டியின் பேய் படமான பிரம்மயுகம் படத்தில் யட்சியாக அமல்டா லிஸ் (Amalda Liz) நடித்துள்ளார். இந்த படத்தின் ஒரே பெண் கதாபாத்திரமே இவர் தான். ஆடையேதும் அணியாமல் தனது கூந்தலை வைத்து மறைத்தபடி நடித்தாலும் பின்னழகு எல்லாம் தெரியும் படி நடித்திருப்பது பலரையும் ஷாக் ஆக்கியிருக்கிறது. ஆனால் இவரது காட்சிகளுக்காக வேண்டி யாரும் தியேட்டர் பக்கம் போய்விடாதீர்கள் மக்களே. ஏனெனில் அவர் வருவது மொத்தம் 2 ஸீன்கள்தான். இரண்டிலுமே ஸீன்தான் என்பது வேறு விஷயம். ஆண்களை மயக்கும் கதாப்பாத்திரம். முதல் காட்சியில் ஒருவரோடும் பிறகு மம்முட்டியோடும் நெருக்கமாக நெருங்கும் காட்சி உள்ளது. இப்படியொரு ரோல் இந்த படத்தில் இருந்தும் எப்படி யு/ஏ சான்றிதழ் கொடுத்தனர் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஆனால் அதை ஆபாசமாக எடுத்துக்கொள்ள முடியாதபடி சமாளித்திவிடுகிறது கேமரா கோணம்.

Bramayugam actress Amalda Liz bold acting without dress shocks fans

பெண் கதாப்பாத்திர வேலை: நிறைய பேருக்கு அமல்டா லிஸ் கதாப்பாத்திரம் ஏன் இந்த படத்தில் வருகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த கேரக்டர் வராவிட்டாலும் படத்தின் கதைக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் மம்முட்டியுடன் அவர் நெருங்கும் காட்சியின்போது, மம்முட்டி "எப்படியாப்பட்ட மலைமுழுங்கி மகாதேவன் மாதிரி நபர் தெரியுமா" என்பதை காண்பிக்க அமல்டா லிஸ் கேரக்டர் உதவுகிறது. அது ஒன்றுதான் இந்த படத்தின் கதைக்கு, பெண் கதாப்பாத்திரம் செய்த ஒரே வேலை.

Bramayugam actress Amalda Liz bold acting without dress shocks fans

யாரு இந்த அமல்டா லிஸ்?: கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அமல்டா லிஸ் கடந்த 2016ம் ஆண்டு துல்கர் சல்மான் நடித்த கம்மாடிப்பாடம் படத்தில் நடித்து மலையாள திரையுலகில் அறிமுகமானார். பகத் ஃபாசிலின் டிரான்ஸ், சியூ சூன், மலையாளம் மற்றும் தமிழில் குஞ்சக்கோ போபன் மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ரெண்டகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அமல்டா லிஸ்.

மம்மூட்டிக்குள் இன்னும் ஃபயர் இருக்கு: ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கருப்பு வெள்ளை நிறத்தில் உருவாகி உள்ள பிரம்மயுகம் படத்தில் ரெண்டே ரெண்டு சீன் தான் வந்து போகிறார் அமல்டா லிஸ். ஆரம்பத்தில் மணிகண்டனை மயக்கும் காட்சியிலும், அதன் பின்னர் மம்மூட்டியுடன் ஒரு காட்சியிலும் நடித்திருக்கிறார். ஆனாலும், அந்த இரு காட்சிகளும் ரசிகர்களின் ஃபேவரைட் காட்சிகளாக அப்படியே மனதில் பதிந்து விடுகின்றன.

70 வயதிலும் மம்மூட்டி சார் எப்படி ஸ்க்ரிப்ட் செலக்ட் செய்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வெரைட்டியான நடிப்பை எப்படிக் கொடுத்து மிரட்டுகிறார் என்றே தெரியவில்லை. அவருக்குள் இன்னமும் ஃபயர் இருக்கிறது என சமீபத்திய பேட்டியில் அமல்டா லிஸ் சொல்லியிருக்கிறார். மேலும், இத்தனை பெரிய படத்திலும் தனக்கும் ஒரு இடம் கிடைத்தது சந்தோஷம் எனக் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X