twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மார்பகத்தில் உள்ள பிரச்சினை பற்றி பெண்கள் கூச்சப்படாம சொல்லுங்க - வரலக்ஷ்மி சரத்குமார்

    |

    சென்னை: மார்பகம் என்பது மனித உடம்பில் உள்ள ஓர் அங்கம் தான். ஆண்களுக்கு உடலில் இருக்கும் சில அங்கங்கள் போல் பெண்களுக்கு இருக்கும் ஓர் அங்கம் தான் மார்பகம். மேலும் மார்பகங்களில் ஏதாவது பிரச்சனையோ, வலியோ இருந்தால் உடனடியாக தாயிடமோ அல்லது சகோதரியிடமோ அவர்களின் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசவேண்டும் என்று நடிகை வரலக்ஷ்மி கூறியுள்ளார். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகிழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சரியான மருத்துவ சிகிச்சை மூலம் முழுவதுமாக மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

    சமீபத்தில் பெண்களை அசச்சுறுத்தி வரும் ஒரு கொடிய நோயாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது மார்பகப் புற்றுநோய். இது ஏற்படுவதற்கான சரியான காரணம் தெளிவாக கண்டுபிடிக்கப்படவில்லை, இருப்பினும் எட்டு பேரில் ஒரு பெண் மார்பக புற்றுநோயால் அவதி படுகிறார்.

    Breast cancer can be cured completely - Varalaxmi

    இது குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். பெண்கள் அதை பற்றி மற்றவர்களிடம் வெளிப்படையாக பேசுவதற்கு தயக்கம் காட்டி வருவதே காரணம். இதனால் தான் மார்பகப் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

    இதனை தடுப்பதற்காக பல விழிப்புணர்வு முகாம்கள் பொது இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் ஒரு மாத காலத்திற்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை விமான நிலைய ஆணையகம் மற்றும் தனியார் தொண்டு அமைப்புகளும் இணைந்து நடத்துகின்றன.

    இந்த நிகழ்ச்சிக்கு நடிகை வரலக்ஷ்மி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் மார்பக புற்று நோய் குறித்து பெண்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தனது கருத்துக்களை பேட்டியின் போது தெரிவித்தார். மார்பகம் என்பது மனித உடம்பில் உள்ள ஓர் அங்கம் தான். அதனால் பெண்கள் அதில் ஏதாவது மாறுதலோ பிரச்சனையோ தென்பட்டால் கூச்சப்படாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தனுஷ் 41 ரெடி.. செல்வராகவன் உடன் மீண்டும் சேர்ந்த தனுஷ்.. என்ன கதை? யார் மியூசிக் தெரியுமா?தனுஷ் 41 ரெடி.. செல்வராகவன் உடன் மீண்டும் சேர்ந்த தனுஷ்.. என்ன கதை? யார் மியூசிக் தெரியுமா?

    பலர் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பது தெரிந்தாலும் அதனை வெளிக்காட்டி கொள்ளமாட்டார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கமே மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை இருக்கிறது என்பது தான். எனவே பெண்கள் ஏதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனையை மேற்கொண்டு அதற்கான சிகிச்சையை எடுத்து கொள்வதன் மூலம் பூரணமாக இந்த மார்பக புற்றுநோயில் இருந்து வெளிவரலாம்.

    மேலும் மார்பகங்களில் ஏதாவது பிரச்சனையோ, வலியோ இருந்தால் உடனடியாக தாயிடமோ அல்லது சகோதரியிடமோ அவர்களின் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசவேண்டும். சரியான மருத்துவ சிகிச்சை மூலம் முழுவதுமாக மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும்.

    ஆண்களுக்கு உடலில் இருக்கும் சில அங்கங்கள் போல் பெண்களுக்கு இருக்கும் ஓர் அங்கம் தான் மார்பகம். அதனால் பெண்கள் எதிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் என்று கூறினார் நடிகை வரலக்ஷ்மி.

    English summary
    Actress Varalaxmi, who is participating in an awareness campaign on Breast Cancer, says that breast is a part of the human body. The breast is just a part of the body for women, just like some body parts for men. Also, if there is any problem or pain in the breasts, immediately talk to their mother or sister about their problem. She spoke that with proper medical care, breast cancer can be cured completely.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X