துருதுரு, அழகு, அழுத்தம்: அமலா பாலின் பல முகங்கள்

By Siva

சென்னை: இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்யவிருக்கும் நடிகை அமலா பாலின் சிறந்த படங்கள் பற்றி பார்ப்போம்.

சிந்து சமவெளி படம் மூலம் கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் அமலா பால். மாமனார், மருமகள் இடையேயான தகாத உறவை காட்டும் அந்த படம் மூலம் பெரும் சர்ச்சை கிளம்பியது.

அதன் பிறகு சுதாரித்து கதாபாத்திரங்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்தார் அமலா.

மைனா

மைனா

விதார்த்துடன் அமலா பால் ஜோடி சேர்ந்து நடித்த படம் மைனா. பாவாடை தாவணியில் படம் முழுக்க வந்த அமலா தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் மைனா.

தெய்வத்திருமகள்

தெய்வத்திருமகள்

தெய்வத்திருமகள் படம் அமலா வாழ்வில் புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. காரணம் இந்த படத்தில் நடித்தபோது தான் அவருக்கும், இயக்குனர் ஏ.எல். விஜய்க்கும் இடையே காதல் ஏற்பட்டது. படம் முழுக்க அமலா அழகுப்பாவையாக வந்தபோதிலும் ரசிகர்களின் மனதை பேபி சாரா தனது நடிப்பால் கொள்ளை கொண்டுவிட்டார்.

வேட்டை

வேட்டை

வேட்டை படத்தில் அமலா பால் துருதுருவென்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆர்யாவின் காதலியாக அம்சமாக நடித்திருந்தார்.

சித்தார்த்

சித்தார்த்

சித்தார்த்துடன் சேர்ந்து காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் அமலா பால் நடித்தார். அய்யோ ஒரு பெண்ணை காதலித்தால் இவ்வளவு கஷ்டமா என்று நினைக்கும்படி நடித்திருந்தார்.

தலைவா

தலைவா

இளைய தளபதி விஜய்யுடன் அமலா ஜோடி சேர்ந்த படம் தலைவா. கோலிவுட்டில் சரிந்த தனது மார்க்கெட்டை தலைவா படம் தூக்கி நிறுத்தம் என்று அமலா நம்பி ஏமாந்தார். இந்த படத்தில் அவர் முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

பார்த்திபன்

பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் கதையே இல்லாமல் எடுத்து வரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அமலா பால் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அமலா விஜய்யுடனான தனது காதலை பார்த்திபனிடம் கூற அவரோ அதை மேடையில் பேசும்போது ஊருக்கே தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X