திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை
Recommended Video
மும்பை: அஜித் பட நடிகை ப்ரூனா அப்துல்லா திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக உள்ளார்.
பிரேசிலை சேர்ந்தவர் ப்ரூனா அப்துல்லா. அவர் மும்பையில் தங்கி இந்திய படங்களில் அதிலும் குறிப்பாக பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்த ஒரேயொரு தமிழ் படம் அஜித்தின் பில்லா 2.
அந்த காரணத்தால் தான் தலைப்பில் அஜித் பட நடிகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ப்ரூனா இங்கிலாந்தை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் ப்ரூனாவுக்கும், ஆலனுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் ப்ரூனா 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

கர்ப்பம்
திருமணம் ஆகாமல் கர்ப்பமாக இருப்பதில் கவலை இல்லை. திருமண சான்று என்பது வெறும் துண்டு காகிதம். அவ்வளவு தான். சில தம்பதிகள் விவாகரத்து செய்கிறார்கள். சிலர் சந்தோஷமே இல்லாமல் சேர்ந்து வாழ்கிறார்கள், சிலர் துரோகம் செய்கிறார்கள்.

தம்பதி
அன்பு தான் இருவரையும் சேர்த்து வைக்கிறது என்று நம்புகிறேன் நான். திருமணம் என்பது அன்பின் அடையாளம் என்று நம்பப்படுகிறது. ஆனால் அது உண்மையா?. நானும், ஆலனும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம்.

குடும்பம்
நான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிந்து எங்கள் இருவீட்டாரும் மகிழ்ச்சியில் உள்ளனர். என் அம்மா இந்த நாளுக்காக தான் காத்திருந்தார். என் குழந்தையின் வரவுக்காக காத்திருக்கிறோம். நானும், ஆலனும் பெற்றோர் ஆக தயாராகிவிட்டோம்.

குழந்தை
நான் கர்ப்பமாக இருப்பதை இத்தனை மாதங்களாக மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பிரசவத்திற்கு பிறகு என் குழந்தையுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்துவிட்டு மீண்டும் வேலைக்கு செல்வேன் என்கிறார் ப்ரூனா.


Click it and Unblock the Notifications











