அங்க கொரோனா விரட்டிட்டு இருக்கு... இதென்னம்மா புருனா..? தல பட நாயகியை கலாய்க்கும் ரசிகர்கள்!
மும்பை: கோவாவில் இருந்து அஜித் பட நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் அஜித், பார்வதி ஓமனகுட்டன் உட்பட பலர் நடித்த படம், 'பில்லா 2'. சாக்ரி டோலட்டி இயக்கி இருந்த இந்தப் படத்தில் நடித்திருந்தவர் புருனா அப்துல்லா.
பிரேசில் மாடலான இவர், மும்பையில் தங்கி படங்களில் நடித்து வந்தார். இவர் இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ்
இந்தியில், சோனம் கபூர், இர்பான் கான் நடிப்பில் புனித் மல்ஹோத்ரா இயக்கிய காமெடி படம், ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் புருனா. அடுத்து அக்ஷஷ்குமார், தீபிகா படுகோன் நடிப்பில் டேவிட் தாவன் இயக்கிய, 'தேஸி பாய்ஸ்', ரிதேஷ் தேஷ்முக், விவேக் ஓபராய் நடித்த கிராண்ட் மஸ்தி, சல்மான் கானின் ஜெய் ஹோ உட்பட சில படங்களில் நடித்திருந்தார்.
View this post on InstagramLucky are the ones in Goa right now! . . #notme 😂
A post shared by Bruna Abdullah (@brunaabdullah) on
பிகினி போட்டோ
இதையடுத்து அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார். இந்நிலையில் மற்ற நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை இவர் பதிவிடுவது வழக்கம். பிகினி படங்களையும் பதிவிடுவார். இந்தப் போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டமே உண்டு.

அதிர்ஷ்டசாலிகள்
இந்நிலையில் இப்போதும் ஹாட் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கோவாவில் இருந்து அவர் எடுத்துள்ள இந்தப் போட்டோவுக்கு கேப்ஷனாக, இப்போது கோவாவில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று பதிவிட்டுள்ளார். இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர். கொரோனாவுக்காக மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கும்போது அவர் இப்படி பதிவிட்டுள்ளதை நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்.

கொரோனா
'என்னது கோவாவுல இருந்தா அதிர்ஷ்டசாலிகளா? இந்த நேரத்துல வீட்டுல இருந்ததான் அதிர்ஷ்டசாலிகள்மா, தெரிஞ்சுக்கோ' என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். கோவோ என்ன, கொரோனாவுக்கு எதிர்ப்பு சக்தியைவா வச்சிருக்குது? என்று சிலர் கலாய்த்துள்ளனர். உங்க ஹாட் போட்டோவை பார்த்தா கொரோனா கூட குப்புறப் படுத்திரும்' என்று சில ரசிகர்கள் கிண்டலாகத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











