இப்படியாயிடுச்சே.. கொரோனா லாக்டவுனால் போச்சு பிசினஸ்.. ஓவர் கவலையில் இருக்கும் பிரபல ஹீரோயின்!

By

சென்னை: கொரோனா காரணமாக பிசினஸ் பாதிக்கப்பட்டுள்ளதால் பிரபல நடிகை கவலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

தலைகீழாக நின்றும் நடனம் ஆடி.. டிசைன் டிசைனா வித்தை காட்டும் ஹீரோயின் - வீடியோ

தமிழில் யுவன், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங்.

இப்போது ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

லாக் டவுன்

லாக் டவுன்

தமிழ் தவிர தெலுங்கு, இந்தியிலும் நடித்து வருகிறார். பிட்னஸில் ஆர்வமுள்ள நடிகை ரகுல் பிரீத் சிங், நேரம் கிடைக்கும்போது ஜிம்மில்தான் இருப்பார். லாக் டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் அவர், தனது வீட்டையே ஜிம்மாக மாற்றியுள்ளார். சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஜிம் புகைப்படங்கள் வைரலாகின. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சில நடிகைகள், இப்போது தொழில்களில் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர்.

ரியல் எஸ்ட்டேட்

ரியல் எஸ்ட்டேட்

கடந்த சில வருடங்களுக்கு முன், சில நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தனர். சிலர் கட்டுமானத் துறைகளி; முதலீடு செய்தனர். இரண்டு தொழிலுமே இப்போது சரியில்லை என்பதால் சிலர் அதை விட்டுவிட்டனர். சில நடிகைகள் சினிமா தயாரிப்பிலும் முதலீடு செய்து வந்தனர். இன்னும் சிலர் வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஃபிட்னஸ் தொழில்

ஃபிட்னஸ் தொழில்

நடிகை ரகுல் பிரீத் சிங், ஃபிட்னஸ் தொழிலில் முதலீடு செய்துள்ளார். அவர் ஐதராபாத்தில் 2 ஜிம்மையும் விசாகப்பட்டினத்தில் ஒரு ஜிம்மையும் தொடங்கி நடத்தி வருகிறார். பின்னர் இதை விரிவுபடுத்திய ரகுல் பிரீத் சிங், மும்பை மற்றும் பெங்களூரிலும் சுமார் 6 கோடி முதலீட்டில் பிட்னஸ் ஸ்டூடியோக்களை திறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மொத்த பிசினஸும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில் நஷ்டம்

தொழில் நஷ்டம்

பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் பலரை வேலையை விட்டு நீக்கியுள்ளன. இந்நிலையில் ரகுலுக்கும் இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களுக்கான சம்பளம், வாடகை உள்ளிட்ட விஷயங்களால் பெரும் நஷ்டத்தை அவர் சந்திக்க இருப்பதாகவும் இதனால் அவர் கவலையில் இருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X