கீர்த்தி சுரேஷ் பக்கத்தில் விஜய்.. சங்கீதாவின் ரியாக்ஷனை பாருங்க.. இது எப்போ தெரியுமா?

சென்னை: நடிகராக பயணத்தை ஆரம்பித்த விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். அவர் மீது மனைவி சங்கீதா வைத்த குற்றச்சாட்டு, திரிஷாவுடன் ஜோடி போட்டு வந்தது உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் அவருக்கு தேர்தலில் பேக் ஃபயர் ஆகும் என்றுதான் எல்லோருமே கணித்திருந்தார்கள். ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு மொத்தம் 108 தொகுதிகளில் வென்றது தவெக. விஜய்யும் சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்த போது இவரால் தமிழ்நாடு அரசியலில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று பலரும் நினைத்தார்கள். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி விஜய் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அதனையடுத்து விஜய்யும், திரிஷாவும் சேர்ந்து ஒரே நிறத்திலான உடைகளை அணிந்துகொண்டு திருமணத்தில் கலந்துகொண்டார்கள். அது மேற்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

C Joseph Vijay Sangeetha Sornalingam and Keerthy Suresh s Throwback Video Goes Viral Again
Photo Credit:

ஒன்றும் நடக்கவில்லை: விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டு, திரிஷாவுடனான கிசுகிசுவெல்லாம் சேர்ந்து அவரது கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஆப்பு கொடுக்கும் என்றுதான் எதிர்க்கட்சியினர் நினைத்தார்கள். ஏன் தவெகவினரேகூட அந்த பயத்தில்தான் இந்தத் தேர்தலை சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் யாருமே நினைக்காத மாதிரி பிரமாண்ட வெற்றியை பெற்றது தவெக. அந்தக் கட்சி மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக மாறியது.

Also Read
எப்போ பார்த்தாலும் ஒரே கூட்டம்.. தனியா இருக்கணும்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓபனா சொல்லிருக்காரே
எப்போ பார்த்தாலும் ஒரே கூட்டம்.. தனியா இருக்கணும்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓபனா சொல்லிருக்காரே

முதலமைச்சர் ஜோசப் விஜய்: ஆனாலும் ஆட்சியமைக்க தேவையான 118 என்ற நம்பர் வராததால்; திமுக கூட்டணி கட்சிகளின் தயவை நாடியது. காங்கிரஸ் அக்கூட்டணியிலிருந்து வெளியே வந்தும்; விசிக, இடது சாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் திமுகவில் கொள்கை ரீதியான கூட்டணியை வைத்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன. இதன் காரணமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக சில நாட்களுக்கு முன்பு சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக்கொண்டார். அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

வராத பிள்ளைகள்: விஜய்யின் பதவியேற்பு விழாவுக்கு சங்கீதா கண்டிப்பாக வரமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். விஜய் - சங்கீதாவின் மகன் ஜேசனும், மகள் சாஷாவும் ஒருவேளை வருவதற்கு வாய்ப்புகள் இருக்குமோ என கருதப்பட்டது. ஆனால் அவர்கள் வரவில்லை. அதேசமயம் திரிஷாவும், அவரது அம்மா உமாவும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. சங்கீதா வராதது சரி; பிள்ளைகளை அழைத்து வர விஜய் முயற்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது பரவலான கருத்து.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் வீடியோ ஒன்று தீடிரென சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் விஜய், சங்கீதா, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அப்போது கீர்த்தியின் அருகே மேடையில் நின்றுகொண்டிருந்தார் விஜய். வரலட்சுமிக்கு அருகில் சங்கீதா நின்றுகொண்டிருந்தார்.

விஜய்யையும், கீர்த்தியையும் கேஷுவலாக பார்த்துவிட்டு ரொம்பவே இயல்பாக ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இதை பார்த்த ரசிகர்களோ, 'சங்கீதா கேஷுவலாக பார்ப்பது மாதிரி இருந்தாலும்; செம கடுப்போடுதான் பார்த்திருக்கிறார். அது நன்றாகவே தெரிகிறது' என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். முன்னதாக விஜய்யோடு இணைத்து கீர்த்தி சுரேஷையும் சில விஷமிகள் கிசுகிசுத்தார்கள். ஆனால் அதில் எல்லாம் துளிக்கூட உண்மையில்லை என்பது பின்னர் தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X