ஹோட்டல் டாய்லெட்டில் ரகசிய கேமரா.. பிரபல நடிகை போலீஸில் புகார்!

புனே: ஹோட்டல் டாய்லெட்டில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக நடிகை ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஹோட்டல் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்குள்ள டாய்லெட்டில் ரகசிய கேமரா இருப்பதை பெண் ஒருவர் கண்டுபிடித்தார்.

இதுதொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம் அந்த பெண் புகார் அளித்ததாக தெரிகிறது. ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அதனை கண்டுகொள்ளவில்லை.

தீயாய் பரவியது

தீயாய் பரவியது

இதனை தொடந்து அந்த பெண் டாய்லெட்டில் இருந்த கேமராவை தனது செல்போனில் படம் பிடித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தீயாய் பரவியது.

போலீசாருக்கு டேக்

போலீசாருக்கு டேக்

இதனை பார்த்த நடிகை ரிச்சா சட்டா, தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த தகவலை தெரிவித்ததோடு அதனை புனே போலீசாருக்கும் டேக் செய்திருந்தார்.

தனியார் நிறுவனம்

தனியார் நிறுவனம்

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஹோட்டலில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கழிவறையை தனியார் நிறுவனம் ஒன்று பராமரிப்பதாகவும் அவர்களின் வேலைதான் இது என்றும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போலீசார் விசாரணை

மேலும் இந்த சம்பவத்திற்காக ஹோட்டல் நிர்வாகம் மன்னிப்பும் கேட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் துப்புரவு நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X